அடி சக்க.. குறைந்தபட்ச மாத பென்ஷன் 9000 ரூபாயா? கிடைத்தால் ஜாலி தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

EPFO சந்தாதாரர்களுக்கு இது ஒரு குட் நியூஸ் காத்துக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் வரவிருக்கும் மாதங்களில் பி எஃப் வாடிக்கையாளர்களுக்கு, சந்தோஷமான விஷயம் பற்றி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் பிப்ரவரி மாதத்தில், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகின்றது.

ஏற்கனவே இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் இருந்து வரும் நிலையில், இது குறித்தான முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டின் முதல் குட் நியூஸ் இதுதான்..!

 குறைந்தபட்ச ஊதியம்

குறைந்தபட்ச ஊதியம்

குறிப்பாக இந்த கூட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் 1,000 ரூபாயிலிருந்து, 9,000 ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து பல கட்ட விவாதங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் பிப்ரவரியில் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

மற்றொரு கோரிக்கை

மற்றொரு கோரிக்கை

அதே போல ஓய்வூதியமானது ஊழியர்கள், கடைசி ஊதியத்தினை பெறும்போதே ஓய்வூதியம் பெற வேண்டும் என்ற பரிந்துரையும் இருந்து வருகின்றது. ஆக இது குறித்தும் தொழிலாளர் நல அமைச்சக கூட்டத்திலும் பரிசீலிக்கப்படலாம்.

பல முறை கோரிக்கை
 

பல முறை கோரிக்கை

இது குறித்து பிரதமர் மோடியிடமும் கடந்த 2020ம் ஆண்டிலேயே முறையிட்டுள்ளதாகவும், கொரோனா காரணமாக இது குறித்த இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை, எனினும் வரவிருக்கும் இபிஎஸ் இன் 95 என்-அசிடைல் சிஸ்டைன் (N-acetyl cysteine) குழுவில் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாளியாகியுள்ளது.

ஊழயர்கள்

ஊழயர்கள்

அரசின் புதிய தொழிலாளர் மசோத்தாக்கள் அமலுக்கு வந்தால், டேக் ஹோம் சேலரி குறையும். அதே சமயம் ஓய்வூதியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கும்போது இது இன்னும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்க வழிவகுக்கலாம்.இதன் மூலம் பல கோடி பிஎஃப் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

good news! your minimum monthly pension may surge to Rs.9,000 in coming months

good news! your minimum monthly pension may surge to Rs.9,000 in coming months/அடி சக்க.. குறைந்தபட்ச மாத பென்ஷன் 9000 ரூபாயா? கிடைத்தால் ஜாலி தான்..!
Story first published: Monday, January 3, 2022, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X