தீபாவளியை முன்னிட்டு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீரா என தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்கள் மத்தியில் கேட்கப்பட்ட கருத்துக்கணிப்பில், பெரும்பாலானோர் சொன்ன பதில், ஆட்டோமொபைல் நிறுவனங்களை பெருமளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்திய கார் நிறுவனங்கள் எப்போதும் இல்லாமல் தற்போது அதிகப்படியான கார்களை இருப்பு வைத்துள்ளது.
நவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் கார் தயாரிப்பாளர்கள் தள்ளுபடிகள் மற்றும் ப்ரோமோஷன் ஆஃபர்களையும் அள்ளி வீச உள்ளனர். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பொதுவாகவே வருடாந்திர விற்பனையில் சுமார் 30-40% இந்த பண்டிகை சீசனின் போது தான் நடக்கும். அதுவும் குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது நாடு முழுவதும் அதிகப்படியான கார் விற்பனை நடக்கும்.

இந்த நிலையில் தான் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் தீபாவளியை முன்னிட்டு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீரா என கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் வாக்களித்தவர்களில், 59 சதவீதத்தினர் தீபாவளி கொண்டாட்டத்திற்கே பணம் இல்லை என தெரிவித்துள்ளனர். 30 சதவீதத்தினர் இல்லை எனவும், 12 சதவீதத்தினர் ஆம் எனவும் பதிலளித்துள்ளனர்.
ஆம் (12%): இந்த சிறிய பகுதி, தீபாவளியை முன்னிட்டு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களை குறிக்கிறது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பவர்களை மற்றும் புதிய காரை வாங்கும் அளவிற்கான நிதிநிலையில் உள்ளதையும் காட்டுகிறது.
இல்லை (30%): இந்த பகுதி, கார் வாங்க திட்டமிடவில்லை என்றாலும், பொருளாதார ரீதியாக கார் வாங்கும் நிலையில் இருப்பவர்களை குறிக்கிறது. அல்லது இவர்களிடம் ஏற்கனவே சொந்தமாக கார் வைத்திருக்கலாம, இல்யெனில் வேறு காரணங்களுக்காக கார் வாங்காமல் இருக்கலாம்.
தீபாவளி கொண்டாடவே காசு இல்லப்பா..! (59%): இந்த பெரிய பகுதி, தீபாவளி கொண்டாட்டத்திற்கே பணம் இல்லாததால், கார் வாங்குவது பற்றி சிந்திக்க முடியாதவர்களை குறிக்கிறது. இது தற்போதைய சாமானிய மக்களின் பொருளாதார சூழலை பிரதிபலிக்கிறது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள், தீபாவளி காலத்தில் பெரும்பாலான மக்கள் புதிய கார் வாங்க திட்டமிடவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. பொருளாதார சவால்கள் மற்றும் பிற காரணங்களால், பெரும்பாலானோர் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதையும் இது காட்டுகிறது.
தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதால், நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளர்கள் தங்களது கார் விற்பனையை அதிகரிக்க தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கார் விற்பனை மந்தமாக இருந்ததால், இந்த பண்டிகை காலம் விற்பனையை புத்துயிர்ப்பிக்கும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன.
பொதுவாக, தீபாவளி என்பது புதிய பொருட்களை வாங்குவதற்கான ஒரு சிறந்த காலமாகக் கருதப்படுகிறது. பல கார் நிறுவனங்கள் தற்போது வாகனங்களின் விலையில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை வழங்குகியுள்ளது. வட்டி இல்லா கடன், இலவச காப்பீடு, பரிசுகள் இப்படி பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் நோக்குடன் டாடா மோட்டார்ஸ், JSW MG மோட்டார், மஹிந்திரா & மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரிக்க பல்வேறு சிறப்பு சலுகையை அறிமுகம் செய்து வருகின்றன. மாருதி சுசூகி போன்ற நிறுவனங்கள் பிராந்திய அடிப்படையிலான ஆஃபர்களை வழங்கி, விற்பனையை மேலும் ஊக்குவிக்கின்றன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications