2024 ஆம் ஆண்டு முடிவடையும் வேளையில், பல்வேறு துறைகளில் நிகழ்ந்த மாற்றங்களைப் போலவே, முதலீட்டு உலகிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆண்டின் துவக்கத்தில் இருந்து இறுதி வரை, முதலீட்டுச் சந்தை ஒரு ரோலர் கோஸ்டர் போல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. குறிப்பாக, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்கள் கூட கணிசமான விலை ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகியுள்ளன.
ஆண்டு துவக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், ஆண்டின் இறுதியில் சற்று மந்தமாகவே காணப்பட்டது. இது போலவே, பங்குச் சந்தை, பத்திரச் சந்தை, மற்றும் பிற முதலீட்டுத் துறைகளும் தங்களது சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொண்டன.

உதாரணமாக 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒருவர் நிஃப்டி 50 குறியீட்டில் ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், டிசம்பர் 13, 2024 நிலவரப்படி அவரது முதலீட்டின் மதிப்பு ரூ. 1,21,300 ஆக உயர்ந்திருக்கும். இது நிஃப்டி 50 குறியீட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பொறுத்து கணக்கிடப்பட்ட ஒரு மதிப்பீடு.
2024-ம் ஆண்டு பங்குச்சந்தை முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைத்தது என்ற கேள்வியை குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாசகர்கள் மத்தியில் கேள்வி கேட்டக்கப்பட்டது. இந்த கேள்விக்கான பதில் பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. பொதுவாக, பங்குச்சந்தை முதலீடு என்பது அதிக லாபம் தரும் ஒரு முதலீட்டுத் திட்டமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் இந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கருத்துக்கணிப்பின் முக்கிய முடிவுகள்:
நஷ்டம் அடைந்தவர்கள் அதிகம்: இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 201 பேர் பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது. இதேபோல் சந்தையை முழுமையாக ஆய்வு செய்யாமலும், முழுமையான புரிதல் இல்லாமலும் முதலீடு செய்திருக்கலாம் என தெரிகிறது.
குறைந்த அளவு லாபம்: 10 சதவீதம் வரை லாபம் கிடைத்ததாக 70 பேரும், 11-20 சதவீதம் வரை லாபம் கிடைத்ததாக 43 பேரும் கூறியுள்ளனர்.
20 சதவீதத்திற்கு மேல் லாபம்: மிகக் குறைந்த அளவிலான 46 பேர் மட்டுமே 20 சதவீதத்திற்கு மேல் லாபம் கிடைத்ததாகக் கூறியுள்ளனர்.
பங்குச்சந்தை பக்கமே போகாதவர்கள்: 158 பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்யவே இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
பல காரணங்களால் இந்த ஆண்டு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். உலகளாவிய பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் அதிகரிப்பு, புதிய கொரோனா வைரஸ் திரிபுகள் போன்ற காரணங்கள் பங்குச்சந்தையை பெரிதும் பாதித்துள்ளன.
இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள், பங்குச்சந்தை முதலீடு என்பது அதிக அபாயத்துடன் கூடியது என்பதை நிரூபிக்கிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், நன்கு ஆராய்ந்து, ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications