தமிழரான சுந்தர் பிச்சை தலைமையில் கூகுள் தனது 25வது பிறந்தநாளை இன்று செப்டம்பர் 27 அன்று கொண்டாடுகிறது. இதற்காக கூகுள் சர்ச் பேஜ்ஜில் தனது லோகோ-வை 25 வருடத்தில் மாற்றப்பட்ட லோகோ-வை GIF ஆக மாற்றியுள்ளது. அமெரிக்க பொருளாதாரத்திலும், அமெரிக்க டெக் சேவை வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் கூகுள் உருவானது எப்படி தெரியுமா..?
செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் முதன் முதலில் ஜனவரி 1997 இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருவரும் படித்துக் கொண்டு இருந்த போது சந்தித்தனர். அப்போது செர்ஜி பிரின் Ph.D மாணவராக இருந்தார், பல்கலைக்கழகத்தில் உள்ள மூத்த மாணவர்கள் ஸ்டான்போர் பல்கலைகழகத்தில் படிப்பதற்காக வரும் புதிய மாணவர்களுக்கு வளாகத்தைச் சுற்றிக்காட்டவும், வழிக்காட்டியாகவும் இருக்க நிர்வாகம் லாரி பேஜை உடன் செர்ஜி பிரின் இணைத்தது.

இதில் இருந்து செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் நட்பு வளர்ந்தது மட்டும் அல்லாமல் கூகுள் உருவாகவும் அடிப்படையாக இருந்தது. கூகுள் துவங்க வேண்டும் என்று திட்டமிட்ட போது இருவரும் அனைத்து கருத்துக்களிலும் முரண்பட்டனர். ஒவ்வொரு விஷயத்தையும் சண்டை போட்டு தான் துவங்கியுள்ளது.
முதல் சந்திப்பை தொடர்ந்து ஒரு வருடம் கழித்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து, தங்களுடைய தங்குமிட அறைகளில் இருந்து ஒரு சர்ச் இன்ஜின்-ஐ உருவாக்கத் தொடங்கினர். மேலும், அவர்கள் தங்கள் முதல் முன்மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கினர்.
செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ்-ன் கண்டுபிடிப்பு சிலிக்கான் வேலியில் உள்ள முக்கிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. இந்த நிலையில் தான் ஆகஸ்ட் 1998 இல், சன் மைக்ரோசிஸ்டம்ஸின் இணை நிறுவனர் ஆண்டி பெக்டோல்ஷெய்ம், செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோருக்கு $100,000 காசோலையை வழங்கினார்.

இதுதான் முதல் முதலீடு, இதை வைத்து தான் Google Inc. அதிகாரப்பூர்வமாக பிறந்தது. இந்த முதலீட்டில் தான் புதிதாக ஊழியர்கள் சேர்க்கப்பட்டனர், ஹாஸ்டல்களில் இருந்கு முதல் அலுவலகத்திற்குச் சென்றனர். முதல் அலுவலகமும் இது கலிபோர்னியாவின் மென்லோ பூங்காவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் கார் கேரேஜ் தான்.
இந்த கார் கேரேஜ்-ன் சொந்தக்காரர் யாரென்றால் சமீபத்தில் கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேறியே யூடியூப் பிரிவின் முன்னாள் தலைவரும், கூகுளின் 16வது ஊழியரான Susan Wojcicki-ன் பெற்றோர்களுக்கு சொந்தமானது.
கூகுளின் முதல் அதிகாரப்பூர்வ பெயர் Backrub, இதற்கு முக்கிய காரணம் இணையத்தில் உள்ள இணைய பக்கங்களின் பேக் லிங்க் அடிப்படையில் ஒரு இணையத்தளத்தின் மதிப்பீடு செய்யும் முறையை இவர்களுடைய சர்ச் இன்ஜின் கொண்டிருந்த காரணத்தால் Backrub என பெயர் பெற்றது.
பின்பு பொது சந்தையில் பலரையும் கவரும் வகையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என திட்டமிட்டு 1 என்ற எண்ணுக்கு அருகில் 100 ஜீரோ வரும் எண்ணுக்கு கூகுள் என அழைக்கப்பட்டதை படித்தனர். இது மிகவும் பிடித்து போக செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் Backrub என்ற பெயரை கூகுள் என மாற்றப்பட்டது.
கூகுள்.காம் என்ற இணைய தளம் செப்டம்பர் 15, 1997 தேதி ரிஜிஸ்டர் செய்யப்பட்டாலும், செப்டம்பர் 1998 வரையில் இந்த சர்ச் இன்ஜின் பக்கம் துவங்கப்படவில்லை. இதன் பின்பு சில தடுமாற்றம் இருந்தாலும் பல சர்ச் இன்ஜின்களை ஓடவிட்டு இன்று அசைக்க முடியாத நிறுவனமான உருவெடுத்துள்ளது.
கூகுள் 1999 ஆம் ஆண்டு தற்போது இருக்கும் கலிப்போர்னியாவின் Mountain View பகுதியில் அமைத்திருக்கும் Googleplex தலைமையகத்திற்கு மாறியது. கடந்த 25 வருட வரலாற்றில் 50 நாடுகளில் 78 அலுவலகங்கள் உடன் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் உடன் இயங்கி வருகிறது.

கூகுள் தற்போது சிஇஓ சுந்தர் பிச்சை, சிஎப்ஓ ரூத் போராட், கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் ஆகியோர் தலைமையில் Adscape, Android, Endoxon, FeedBurner, ImageAmerica, Kaltix, YouTube, ZipDash ஆகிய கிளை நிறுவனங்கள் உடன் இயங்கி வருகிறது.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இன்க் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரை நிர்வாக குழு உறுப்பினராகவும் ஜான் எல் ஹென்னசி சேர்மன் ஆக கொண்டு சிஇஓ சுந்தர் பிச்சை, சிஎப்ஓ ரூத் போராட் உடன் இயங்கி வருகிறது.
ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் Calico, CapitalG, DeepMind, Google, Google Fiber, GV, Intrinsic, Isomorphic Labs, Verily, Waymo, Wing, X Development ஆகிய கிளை நிறுவனங்கள் உடன் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன், தானியங்கி கார்கள், பயோடெக்னாலஜி, கிளவுட் கம்ப்யூட்டிங், கணினி வன்பொருள், கார்ப்பரேட் வென்சர் கேப்பிடல், ஃபைபர் டு தி x, சுகாதார பராமரிப்பு, இணையதளம், ரோபாட்டிக்ஸ், மென்பொருள் ஆகிய துறையில் பணியாற்றி வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications