உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் இந்த ரெசிஷன் காலத்தில் தனது வர்த்தகத்தையும், லாப அளவுகளையும் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக அதிகளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஆனால் இதுவரையில் செய்யப்பட்ட பணிநீக்கம் போதுமானதாக இல்லை என்பதால் அடுத்த ரவுண்டு பணிநீக்கத்தை அறிவிக்க திட்டமிட்டு வருகிறது.
அமேசான், கூகுள் போன்ற உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் நிலையில் உலகில் பல நாடுகளில் ஊழியர்களை வைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்த நிலையில், ஐரோப்பாவில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

ஐரோப்பாவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதில் கூகுள், அமேசான் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் மிகவும் கடுமையான தொழிலாளர்கள் சட்டம் இருக்கும் காரணத்தால் இந்தியா, அமெரிக்காவை போல் அங்கு ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்துவிட முடியாது. பணிநீக்கம் செய்யும் முன்பு ஒரு நிறுவனம் employee interest groups-யிடம் ஆலோசனை செய்து ஒப்புதல் பெற வேண்டும்.
இந்த ஆலோசனை தாமதமாகும் காரணத்தால் அமேசான், கூகுள் திட்டமிட்ட படி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. ஐரோப்பிய தொழிலாளர் சட்டத்தின் படி, பணிநீக்கம் செய்யும் முன் நிறுவனங்கள் தொழிலாளர்கள் கவுன்சில்-யிடம் அறிவிக்க வேண்டும், இதை தொடர்ந்து பல்வேறு தரவுகளை சேகரித்து, அதன் அடிப்படையில் ஆய்வு செய்து பணிநீக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும்.
இந்த செயல் முறையில் அதிகளவிலான தாமதமாகும் நிலையில் பிரான்ஸ், ஜெர்மனியில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி கூகுள் நிர்வாகம் தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு மிகவும் சிறப்பான severance packages அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதேபோல் அமேசான் நிறுவனம் பிரான்ஸ், ஜெர்மனி நாட்டில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 5-8 வருட அனுபவத்துடன் சீனியர் மேனேஜர் பதவியில் இருப்பவர்கள் தனது பணியை ராஜினாமா செய்தால் 1 வருட சம்பளத்தை severance package ஆக அளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் வெளியேறும் ஊழியர்கள் கையில் இருக்கும் நிறுவன பங்குகளுக்கு உடனடியாக பணத்தை அளிக்கவும் தயார் என அறிவித்துள்ளது.
கூகுள் பிரிட்டன் நாட்டில் இருக்கும் 8000 ஊழியர்களில் 500 பேரை பணிநீக்கம் செய்துள்ளது, மேலும் அவர்களுக்கு ரகசியமான severance package அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் டப்ளின், சுரிச் ஆகிய பகுதிகளில் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வரும் வேளையில் ஊழியர்களிடம் severance package குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
தொழிலாளர் விதிகள் கடுமையாக இல்லாத காரணத்தால் இந்தியாவில், அமெரிக்காவில் ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்ய முடியுமா என்ற கேள்வி வருகிறது. இதேவேளையில் இந்தியாவில் பணிநீக்கம் செய்த அனைத்து பன்னாட்டு டெக் நிறுவனங்களும் உள்நாட்டு விதிமுறைகளுக்கு இணங்க பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications