கலிபோர்னியா: கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அன்று, கூகுள், முதல் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தனது நிறுவனத்தில் முக்கியமான டீம்களில் பணிபுரியும் 200 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
CNBC தரவுகளின்படி, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் கூகுளின் கோர் யூனிட்டில் பணிபுரியும் 200 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளது.

கோர் யூனிட் என்றால் என்ன?: கோர் யூனிட் என்பது நிறுவனத்தின் டெக் தயாரிப்புகளுக்கு பின்னால் உள்ள சிக்கல்களைச் சரி செய்வதும், பயனர்களின் ஆன்லைன் பாதுகாப்பை காப்பதும், இந்த கோர் யூனிட் பணியாளர்களின் பொறுப்பாகும். கோர் யூனிட் என்பதன் கீழ் ஐடி டீம், டெவெலப்பர் டீம், டெக்னிக்கல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டீம், செக்யூரிட்டி பவுண்டேஷன் டீம், ஆப் டீம் மற்றும் இதர பொறியியல் சார்ந்த டீம்களும் அடங்கும்.
கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, கலிபோர்னியா அலுவலகத்தில் உள்ள 50 பொறியியல் பணியைச் சார்ந்த பணியாளர்களைப் பனி நீக்கம் செய்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள், மெக்சிகோ மற்றும் இந்தியாவில் உள்ள இதே போன்ற பொறுப்புகளைக் கொண்ட நபர்களால் நிரப்பப்படும் என்றும் CNBC தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படுகிற ஏஐ பயன்பாடு கூகுள் நிறுவனத்தின் சேவைகளில் அதிகரித்துள்ள, காரணத்தால் பெரும்பாலான பணியிடங்களில் ஊழியர்களின் அவசியத்தை குறைத்துள்ளது. ஆட்டோமேட்டிக்காக வேலைகள் செய்ய ஏஐ பயன்படுத்தப்படுகிறது. இதுவும் பணி நீக்கத்திற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
கூகுள் டெவலப்பர் எகோசிஸ்டமின் துணைத் தலைவர் அசிம் ஹுசைன், கடந்த வாரம் தனது குழுவிற்கு ஒரு ஈமெயில் மூலம் பணிநீக்கம் குறித்த செய்தியை அறிவித்துள்ளார்.
ஹுசைன், அந்த ஈமெயிலில் தற்போதைய அலுவலகங்களை உலக அளவில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், நிறைய புதிய வேலை வாய்ப்புகளை தேவைப்படும் இடங்களில் வழங்கவும், மற்றும் டெவலப்பர்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் இத்தகைய பணிநீக்கம் செய்ய உள்ளகாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்தின் பிற வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனம் இதேபோன்று கடந்த 2023 ஆம் ஆண்டிலும் பணி நீக்கம் செய்தது. அப்போது குறிப்பாக தங்களுடைய நிதித் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் பணிநீக்கத்தை செய்தது. மேலும் 2024 ஆம் ஆண்டிலும் பணி நீக்கம் இருக்கும் என கூகுள் நிறுவனத்தின் தலைவரான சுந்தர் பிச்சை முன்கூட்டியே அறிவித்திருந்தார். அதன்படி தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக வரும் நாட்களிலும் இதே போன்று ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி நீக்கம் தொடரலாம் என்றும் கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications