உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள்-ன் AI சாட்பாட் தளமான ஜெமினி-யில் பிரதமர் மோடியைப் பற்றிய பல கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர், கூகுள் இந்தியப் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
இது மட்டும் அல்லாமல் கூகுள் தன் வாயாலேயே அதன் ஜெமினி தளத்தை 'நம்பகமற்றது' என்று கூறியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாக டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்தது.

பிரதமர் மோடி குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் ஜெமினி அளித்த "ஆதாரமற்ற" பதில் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சந்திரசேகர் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள கூகுள், மோடியிடமும், இந்திய அரசிடமும் மன்னிக்கவும், தளம் நம்பகத்தன்மையற்றது என்று விளக்கம் அளித்துள்ளதாக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார். மோடி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குக் கூகுள் ஜெமினி கொடுத்த பதிலை பாருங்க.

கூகுள் ஜெமினி செயல்பாட்டைத் தொடர்ந்து AI தளங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி தேவை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. AI இயங்குதளங்களுக்கான சோதனைக் களமாக இந்தியாவைப் பயன்படுத்தக் கூடாது.
குறிப்பாக மக்களின் கேள்விகளுக்கு ஆதாரமற்ற, பாரபட்சமான, தவறான தகவல் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை வழங்குவதற்காக உலகளவில் கூகுள் எதிர்கொண்ட விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இத்தகைய முடிவுக்கு வந்துள்ளது.
ஜெமினி, சாட்ஜிபிடி போன்றவை சரியான சோதனை அல்லது பாதுகாப்புகள் இல்லாமல் AI தரவு பொது இணையத்தில் வெளியிடப்படுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த தளங்கள் நம்பத்தகாத தகவல்களை வழங்கும்போது, எந்த விளைவுகளையும் சந்திக்காமல் மன்னிப்பு கேட்கின்றன.
எடுத்துக்காட்டாக, கூகுளின் ஜெமினி, ஆய்வகத்தில் முறையாகச் சோதனை செய்யாமல் பொது இணையத்திற்குச் சென்று மக்களுக்குத் தவறான கருத்துக்களையும், நம்ப தகாத கருத்துக்களையும் வழங்கி வருகிறது. இது முற்றிலும் சட்டத்தை மீறும் செயல், ஆனால் கூகுள் மன்னிப்பு மட்டும் கேட்டுவிட்டு பிரச்சனையிலிருந்து விலகுகிறது.
இதேபோன்ற பிரச்சனையை அமெரிக்காவில் கூகுள் எதிர்கொண்டது, X தளத்தில் EndofWokeness என்ற கணக்கில் பகிரப்பட்டப் பதிவு தற்போது பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. இந்தப் பதிவில் 'அமெரிக்காவின் ஸ்தாபன தந்தையின் உருவப்படம்' என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போது, நேடிவ் அமெரிக்கன் பாரம்பரிய தலைக்கவசம் அணிந்த ஒரு பூர்வகுடி அமெரிக்கப் புகைப்படத்தையும், கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒரு ஆண் புகைப்படத்தையும், கருப்பு நிறத்தினைக் கொண்ட ஒரு வெள்ளை அல்லாத ஆண், ஆசிய பகுதியை சேர்ந்த ஒரு ஆண் புகைப்படங்களைக் காட்டியுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications