உலகளவில் உருவாகியிருக்கும் ரெசிஷன் அச்சம், மந்தமான பொருளாதாரச் சூழ்நிலை ஆகியவற்றைச் சமாளிக்கக் உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான கூகுள் செலவுகளை குறைக்கும் விதமாக 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த கூகுள் நிர்வாகம் தற்போது புதிய ஊழியர்களை அதிகளவில் சேர்க்கும் பணியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் கூகுள் ஊழியர்கள் இப்போது செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தங்களுடை அலுவலக மேஜைகள் அதாவது சீட்-களை பிற ஊழியர்கள் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவுக்கு பின்பு ஊழியர்களுக்கு அலுவலகம் வருவதில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதேவேளையில் அமெரிக்காவின் முக்கியமான அலுவலக பகுதிகள் ரியல் எஸ்டேட் சூழ்நிலை பெரிய அளவில் மாறியுள்ளது. இதனாலேயே சமீபத்தில் பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் சில அலுவலகங்களை காலி செய்தும், மறு குத்தகைக்கு விடும் முடிவுகளை எடுத்தது. ரியல் எஸ்டேட் செலவுகள் ஒரு நிறுவனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணத்தால் இத்தகைய முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்த வழியில் தற்போது சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள்-ம் இணைந்துள்ளது. பெரிய டெக் நிறுவனங்களின் அலுவலகங்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும், இதேபோல் ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் சீட், மேஜை அனைத்தும் பிரம்மாண்டமாக இருக்கும். மேலும் பெரிய டெக் நிறுவனங்களில் சில இடத்திற்காக பெரும் போட்டியே இருக்கும், ஆனால் இனி இப்படிப்பட்ட போட்டியே இருக்காது, எந்த இடமும் அவருக்கான நிரந்தர இடம் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் பணிநீக்க அறிவிப்புகளுக்கு பின்பும் செலவுகளை குறைப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது, இந்த வகையில் "ரியல் எஸ்டேட் செயல்திறனை" அதிகரிப்பதற்காக, கூகுள் தனது ஊழியர்களை அடுத்த காலாண்டிலிருந்து அலுவலகத்தில் மேஜைகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒரு ஊழியர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது தங்களுடைய வொர்க் பார்ட்னர் உடன் திட்டமிட்டு ஒருவர் வந்தால் போதும் என்று அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதல்
அடுத்த காலாண்டு என்றால் வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை வழக்கத்திற்கு வரும், இது மிகப்பெரிய கூகுள் அலுவலகங்கள் சிலவற்றில் இடத்தை மேம்பட்ட முறையில் பயன்படுத்த அனுமதிக்கும். இதேபோல் அதிகப்படியான ஊழியர்களை ஒரு அலுவலகத்தில் பணியில் அமர்த்த முடியும். மேலும் இதர பிற சேவைக்கான செலவுகளையும் குறைக்க முடியும் கூகுள் நம்புகிறது என ஃபார்ச்சூன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
மேஜை-பகிர்வு திட்டம்
இந்த புதிய மேஜை-பகிர்வு திட்டம் அமெரிக்காவில் உள்ள கூகுள் கிளவுட் சேவை பிரிவின் மிகப்பெரிய அலுவலகபங்களை கொண்டு இருக்கும் கிர்க்லாண்ட், வாஷிங்டன், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, சியாட்டில் மற்றும் சன்னிவேல், கலிபோர்னியா ஆகிய பகுதி ஊழியர்களுக்கும், அலுவலகத்திற்கு பொருந்தும்.
அலுவலங்கள் காலி
இதேபோல் கூகுள் நிர்வாகம் இப்பகுதியில் இருக்கும் சில கட்டிடங்களும் காலி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் பரந்த செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்நிறுவனம் அதன் ரியல் எஸ்டேட் செலவுகளை அதிகளவில் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அலுவலகம் வரும் நாள்
இந்த புதிய மேஜை-பகிர்வு திட்டத்தை எளிதாக்க ஊழியர்கள் திங்கள் மற்றும் புதன் அல்லது செவ்வாய் மற்றும் வியாழன் போன்ற வேலை நாட்களில் சுழற்சி முறையில் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வர கூகுள் நிர்வாகம் ஊக்குவித்துள்ளது. மேலும் ஒதுக்கப்பட்ட நாளில் அலுவலகம் வருபவர்களுக்கு மேஜை இல்லாத பட்சத்தில் அவர்கள் "ஓவர்ஃப்ளோ டிராப்-இன் இடத்தில்" உட்கார வேண்டும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications