உலகின் மிகப்பெரிய சர்ச் இன்ஜின் நிறுவனமான கூகுள் மீது வர்த்தக ஒழுங்குமுறை ஆணையமான சிசிஐ-யின் உத்தரவு சரியானது என NCLAT புதன்கிழமை உறுதி செய்தது. இதன் மூலம் கூகுள் 1,337.76 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) இரு உறுப்பினர் அடங்கிய பெஞ்ச், கூகுளின் மேல்முறையீட்டை விசாரித்த பின்பு உத்தரவை வெளியிட்டது. இந்த உத்தரவு அமல்படுத்திய 30 நாட்களில் அபராத தொகையை டெபாசிட் செய்யுமாறு கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
நீதிபதி அசோக் பூஷன் மற்றும் உறுப்பினர் அலோக் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய NCLAT பெஞ்ச் CCI உத்தரவில் சில மாற்றங்களைச் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு வழக்கு
கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி, ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் தொடர்பாக கூகுள் சந்தை போட்டித்தன்மைக்கு எதிரான நடைமுறைகளை கொண்டு செயல்பட்டதை சிசிஐ அமைப்பு கண்டுபிடித்தது.
சிசிஐ அமைப்பு
இதை தொடர்ந்து கூகுள் நிறுவனத்திற்கு சிசிஐ அமைப்பு சுமார் ரூ.1, 337.76 கோடி அபராதம் விதித்தது. இது மட்டும் அல்லாமல் கூகுள் இந்தியாவில் செயல்படுத்தி வரும் பல்வேறு நியாயமற்ற வணிக முறைகளை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டது.
அபராதம் மற்றும் குற்றச்சாட்டு
இந்த நிலையில் கடந்த மாதம், கூகிள் இந்திய கிளை CCI அமைப்பு விதித்த அபராதம் மற்றும் குற்றச்சாட்டு ஆகியவற்றை எதிர்த்து NCLAT க்கு "நியாயமற்ற திணிப்பு" இருப்பதாக மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டு மனுவை ஜனவரி 4 ஆம் தேதி சமர்ப்பித்தது.
சுப்ரீம் கோர்ட்
இது மட்டும் அல்லாமல் கூகுள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில், சுப்ரீம் கோர்ட் மார்ச் 31-க்குள் இந்த வழக்கிற்கு முடிவு எடுக்க NCLAT -க்கு உத்தரவிட்டது. இதற்கிடையில் சிசிஐ மாற்றம் செய்ய கோரிய 10 விஷயத்தையும் இந்த இடைப்பட்ட காலத்தில் தொடரவும் அனுமதி வழங்கியது.
30 நாட்களுக்குள்
இந்த குற்றச்சாட்டை குறித்து NCLAT பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் சிசிஐ மற்றும் கூகுள் மத்தியில் விசாரணை நடத்தி, மேல்முறையிட்டு மனுவை முழுமையாக மறுத்து அபராத தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த உத்தரவிட்டு உள்ளது.
அக்டோபர் 20 உத்தரவு
அக்டோபர் 20 ஆம் தேதி கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அதன் ஆதிக்க நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக சிசிஐ 1, 337.76 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதைச் சரிசெய்வதற்குக் கூகுள் நிறுவனத்திற்கு 12க்கும் அதிகமான நடவடிக்கை மாற்றங்களைச் செய்யக் கட்டுப்பாட்டாளர் பரிந்துரைத்துள்ளார்.
கூகுள் ப்ளே ஸ்டோர் உத்தரவு
இதோடு கூகுள் ப்ளே ஸ்டோரின் கொள்கையில் ஆப் டெவலப்பர்கள் அனைத்து வாடிக்கையாளர் பில்லிங்களுக்கும் கூகுள் பிளேயின் பில்லிங் சிஸ்டத்தை (GPBS) மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. கூகுள் அதன் ஆதிக்க நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 936.44 கோடி ரூபாய் அபராதம் சிசிஐ விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications