கூகுள் தங்களின் பிக்சல் மற்றும் ஆண்டிராய்டு பிரிவில் பணியில் இருக்கும் ஊழியர்களை வேலையை விட்டு செல்லுமாறு கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் கூகுள் நிறுவனம் பிக்சல் ஹார்ட்வேர் மற்றும் ஆண்ட்ராய்டு சாப்ட்வேர் நிறுவனங்களை ஒருங்கிணைத்தது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் இந்த பிரிவின் பிளாட்பார்ம் மற்றும் டிவைஸ் டிபார்ட்மெண்டில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு மெமோ அனுப்பி இருக்கிறதாம். இந்த மெமோவில் ஊழியர்கள் தாங்களாகவே வேலை விட்டு செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கணிசமான தொகையுடன் நீங்கள் வேலையை விட்டு தானாகவே நின்று விடலாம் என அந்த மெமோவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு பெரிய நிறுவனங்களை நாங்கள் ஒரே நிறுவனமாக மாற்றி இருக்கிறோம் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என அந்த மெமோவில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பொதுவாக இதுபோல ஊழியர்கள் தானாகவே வெளியேறலாம் என்று அறிவிப்பை வெளியிட்டால் அடுத்த சில மாதங்களிலேயே கூகுள் நிறுவனம் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான ஒரு அறிகுறி தான் இந்த மெமோ என கூகுள் நிறுவன ஊழியர்கள் பலரும் கூறுகின்றனர்.
முன்னதாக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பணிபுரியக்கூடிய கூகுள் ஊழியர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி ஒரு மனுவை தயாரித்து சுமார் 1200 ஊழியர்கள் அதில் கையெழுத்திட்டு கூகுள் தலைமைக்கு அனுப்பியுள்ளார்களாம்.
இந்த கடிதத்தை அனுப்பிய நிலையில் கூகுள் நிறுவனம் இப்படி ஊழியர்களுக்கு மெமோவை அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டிலிருந்து கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இது தங்களுக்கு பணி பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியும் நிறுவனம் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வரும் போதிலும் ஏன் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது என்ற கேள்வி எழுப்பியும் இந்த மனுவானது கூகுள் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைக்கு அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களை மட்டுமே கூகுள் நிறுவனம் பணியில் இருந்து தானாக விலகிக் கொள்ளும்படி கூறியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் சுமார் 10% ஊழியர்களை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்தது. நிறுவன செயல்பாடுகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுப்பதாக கூகுள் நிறுவனம் கூறியிருந்தது.
உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனம் தான் கூகுள். ஆனால் இந்த நிறுவனம் அவ்வப்போது ஊழியர்கள் பணிநீக்கத்தையும் செய்கிறது.


Click it and Unblock the Notifications