கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது டெக் பயணத்தை குறித்து, இதன் முன்னேற்றம் குறித்து, டெக் சார்ந்த எதிர்கால முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கும் மிகவும் முக்கியமான கூட்டம் கூகுள் I/O கான்பிரன்ஸ்.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த கூகுள் I/O மாநாட்டு கூட்டத்தில், சுந்தர் பிச்சை முதல் மூத்த அதிகாரிகள் பல முக்கிய டெக் முன்னேற்றும் குறித்து பேசுவார்கள். அந்த வகையில் இன்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை Bard chatbot அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
ChatGPT-க்கு போட்டியாக கூகுள் பார்ட் இந்த ஆண்டு பிப்ரவரியில் முதன்முதலில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்ட போது காத்திருப்புப் பட்டியல் வழியாக மட்டுமே அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மக்கள் இதை பயன்படுத்தி வந்தனர்.

இன்று முதல் கூகுள் தனது BARD தளத்தை இந்தியா உட்பட 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் பொது மக்கள் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்தும் வகையில் கதவுகளை திறந்துள்ளது. இந்த நிலையில் கூகுள் BARD குறித்து அனைத்து தரப்பு மக்களும் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்ன..?
Conversational generative AI chatbot தொழில்நுட்ப என்பது தற்போது இணையத்தில் தேடுவதன் அடுத்த பரிணாமம் அவ்வளவு தான், ஆனால் இது மிகவும் முக்கியமானது. உதாரணமாக மெரினா பீச்-ன் முக்கிய அம்சம் என்ன என கூகுள் க்ரோம் அல்லது மைக்ரோசாப்ட் EDGE ஆகியவற்றில் தேடினால் மெரினா பீச்-ன் முக்கிய அம்சத்திற்கு தொடர்புடைய link-களின் பட்டியலை கொடுக்கும்.
ஆனால் Conversational generative AI chatbot தொழில்நுட்ப மெரினா பீச்-ன் முக்கிய அம்சம் என்ன டைப் செய்த அடுத்த நொடியில் மொத்த விபரத்தையும் தொகுத்து மக்கள் இயல்பாக படிக்கும் விதிதத்தில் கொடுக்கும். இதனால் இணைப்பை கிளிக் செய்வது, இதில் தேடுவது போன்ற விஷயங்கள் இருக்காது.
கூகுள் BARD தளமும் PaLM 2 என்ற கட்டமைப்பில் இயங்கி வருகிறது, PaLM 2 என்பது கூகுள் உருவாக்கியுள்ள புதிய large language model (LLM). பார்டின் கோடிக், மேம்பட்ட கணிதம் மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவற்றில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றங்கள் PalM 2 க்கு மாறுவதன் மூலம் சாத்தியமாகியுள்ளன.
Google Bard விரைவில் புகைப்படங்களைப் பயன்படுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனைக் கொண்டிருக்கும், இது மக்கள் தகவல் தேடுவதை எளிதாக்கும்.

கூகிளின் கூற்றுப்படி, பார்ட் ஏற்கனவே 20 க்கும் மேற்பட்ட ப்ரோகிராமிங் லேங்குவேஜ்-ல் சிறந்து விளங்குகிறது. Google Sheets, Python, C++, Go, Java Script, மற்றும் Ruby உட்பட பல முக்கிய தொழில்நுட்பத்தில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு coding உதவிகளை செய்கிறது.
GPT-4 ஐப் போலவே Wolfram, Khan Academy, ZipRecruiter, OpenTable, Kayak மற்றும் OpenTable போன்றவைக்கு கூகுள் add ons வழங்கும். டாக்ஸ், டிரைவ், ஜிமெயில், மேப்ஸ் மற்றும் பிற பயன்பாடுகளின் அம்சங்களுக்கான பார்ட்-ன் சேவையை Google வழங்கும்.
கூகுள் - Adobe Firefly உடன் இணைந்து மக்கள் ஒரே கோரிக்கை வாயிலாக தங்களுக்கு தேவையான புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications