உலகையே புரட்டிப்போட்டு உள்ள AI சாட்பாட் சேவையான ChatGPT மக்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் என்ற அச்சத்தை கொடுக்கும் வேளையில், வல்லவனுக்கு வல்லவனாக கூகுள் மிகப்பெரிய திட்டத்துடன் அனைத்து தரப்பு மக்களுக்கும், உலகளவில் பல மொழிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட BARD அமெரிக்காவில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் இந்தியாவிலும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதை எப்படி பயன்படுத்துவது..? மைக்ரோசாப்ட் முதலீட்டில் இயங்கும் ChatGPT போல் BARD-ம் கட்டணத்தை வசூலிக்குமா..? GOOGLE BARD-ஐ எங்கிருந்து துவங்க வேண்டும்..?

இந்தியாவில் Bard என்னும் AI CHATBOT தளத்தை இலவசமாக பயன்படுத்துவது எப்படி:
படி- 1: முதலில் BARD-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bard.google.com க்குச் செல்லவும்
படி - 2: துவக்க பக்கத்தின் கீழ் வலது மூலையில் உள்ள 'TRY ME' என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
படி - 3: முதல் முறையாக GOOGLE BARD-ஐ பயன்படுத்தும் போது பல்வேறு விதிமுறைகளை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு ஒப்புதல் கேட்கும். இந்த பக்கத்தின் கீழே உள்ள 'I agree' என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் Google Bard இன் தனியுரிமைக் கொள்கையை ஏற்க ஒப்புதல் அளிக்கப்படும்.
படி - 4: நீங்கள் இப்போது காத்திருப்புப் பட்டியலுக்குச் செல்லாமல் Google Bard ஐ இலவசமாகப் பயன்படுத்தலாம்
படி - 5: இதற்கு முன்பு GOOGLE BARD தளத்தில் ரிஜிஸ்டர் செய்திருந்தால் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது இதை இந்தியாவில் இருக்கும் அனைவரும் பயன்படுத்த முடியும்.
படி - 6: உள்நுழைந்ததும் நீங்கள் உங்கள் கேள்வியை கேட்க துவங்கலாம்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்..? - கூகுள் கடந்த சில மாதங்களாக பாதுகாப்பற்ற கன்டென்ட் BARD தளத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பணியில் தீவிரமாக இருந்தது. இதை செய்து முடித்த பின்பு தான் 180 நாடுகளில் பயன்படுத்த தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்த பாதுகாப்பானதாக இருக்கும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் பயன்படுத்த முடியும்.
பார்ட் முதலில் காத்திருப்பு பட்டியல் மூலம் யுஎஸ் மற்றும் யுகே பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால் இந்த BARD சாட்பாட் இப்போது 180 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது.
மேலும் பல நாடுகளுக்கு விரைவில் சப்போர்ட் சேர்ப்பதாக Google உறுதியளிக்கிறது. இருப்பினும், பார்ட் இன்னும் பீட்டா நிலையில் உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது, இதனால் பிற AI - CHATBOT போலவே, தவறுகள் செய்யும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications