பெங்களூர்: பெங்களூர் போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களில் வசிக்கும் நபர்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஒரு பெரிய பிரச்சனை. இதனை சமாளிக்க பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு தனித்துவமான சலுகைகளை வழங்குகின்றன. அதில் ஒன்று பணியாளர்களுக்கு வழங்கப்படும் கேப் வசதி. இதன் ஒரு உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் இலவச கார் சேவையைக் காணலாம்.
பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார் பிரியான்ஷ் அகர்வால். இதனால் அவருக்குக் கூகுள் நிறுவனம் இலவச கார் சேவையை வழங்கி உள்ளது. இந்த சேவை பிரியான்ஷ் அகர்வாலுக்கு மிகவும் பிடித்தமான சலுகையாக இருக்கிறது. 12 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் பிரியான்ஷுக்கு, அலுவலகத்திற்கு சென்று வர இந்த சேவை பெரிதும் உதவுகிறது.

இது குறித்து தனது X பிளாட்ஃபார்மில் பதிவிட்டுள்ள பிரியான்ஷ் அகர்வால் "அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையே கூகுள் கேப் சேவையை வழங்குகிறது. பெங்களூரில் இது மிகப்பெரிய சலுகைகளில் ஒன்றாகும். நான் அலுவலகத்திலிருந்து 12 கிமீ தொலைவில் வசிக்கிறேன், நான் Uber/Ola/Rapido போன்ற வாகனங்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இது எனக்கு உதவியாக உள்ளது. மேலும் பணத்தை சேமிக்கவும் முடிகிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தன்னுடய ட்வீட்டில், ஐஐடி-டெல்லி முன்னாள் மாணவரான பிரியான்ஷ் அகர்வால், தான் பணிபுரிந்த முந்தைய நிறுவனங்கள் யாரும் இந்த நன்மையை வழங்கவில்லை என்று கூறியுள்ளார். அகர்வால் தனது X பக்கத்தின் பயோவில், தான் முன்பு Zomato மற்றும் Goldman Sachs நிறுவனங்களில் பணிபுரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்காக ஒதுக்கிய வாகனங்களைக் குறிப்பிட "GCabs" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அகர்வாலின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்த சில பயனர்கள், பெங்களூரில் பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு இதேபோன்ற கார் சேவையை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பெங்களூரில் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இந்த வசதியை வழங்குகின்றன. அசஞ்சர், அமேசான், டிசிஎஸ், ஐபிஎம், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட், விப்ரோ, ஹச்சிஎல், ஆரக்குள், அடோப், சிஸ்கோ, டெல், ஹெச்பி, இன்டெல், மைக்ரோசாப்ட், KPMG போன்ற நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களும் கேப் வசதியை வழங்குகிறார்கள் என்று கௌரவ் உபாத்யாய் என்ற X பயனர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தங்களது நிறுவனங்கள் இதுபோன்ற சலுகைகளை வழங்கவில்லை என சில பயனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் இலவச கார் சேவை நிச்சயமாகவே பணியாளர்களைக் கவரும் சிறந்த சலுகை. ஆனால், பெங்களூர் மற்றும் குர்கான் போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல், பிற நகரங்களிலும் இது போன்ற போக்குவரத்து சலுகைகளை பல நிறுவனங்கள் வழங்குகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். வேலை தேடும் போது, இதுபோன்ற சலுகைகளையும் கருத்தில் கொள்வது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications