கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சை தலைமையில் பல பிரிவுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும், அனைவரும் வியந்து பார்ப்பது ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் பிரிவு தான். இத்துறையில் ஏற்கனவே மைக்ரோசாப்ட் இறங்கு தோல்வி அடைந்த நிலையில் கூகுள் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது.
இதன் உச்சகட்டமாக கூகுள் சமீபத்தில் அறிமுகம் செய்த கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில் முக்கியமாக ஜப்பான் நாட்டில் ஆப்பிள் ஐபோன் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் பிக்சல் போன்கள் சமீபத்தில் பெரிய வர்த்தகத்தை கைப்பற்றியுள்ளது.

இதேபோல் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள், சாம்சங் மட்டுமே போட்டிப்போட்டு வந்த நிலையில் இரு நிறுவனங்களுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் பிக்சல் போன் அமைந்துள்ளது. இந்த நிலையில் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் பிக்சல் போன்களின் விற்பனையை அதிகரிக்க அதன் உற்பத்தியை தரமானதாகவும், இதேவேளையில் மலிவானதாகவும் மாற்ற திட்டமிட்டது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மோடி மற்றும் சுந்தர் பிச்சை வீடியோ கால் வாயிலாக இந்தியாவில் தனது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தாயரிப்பது குறித்து பேசினர். இதை தொடர்ந்து இன்று மாபெரும் அறிவிப்பை கூகுள் ஃபார் இந்தியா கூட்டத்தில் கூகுள் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
ஆப்பிள் மற்றும் சாம்சங் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்-களை இந்தியாவில் தயாரிக்கம் வேளையில் இதனுடன் தற்போது கூகுள்-ம் இணைந்துள்ளது. Google for India கூட்டத்தின் 9வது பதிப்பில், இந்நிறுவனம் பிக்சல் போன்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிடும் போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் இருந்தார். இதன் மூலம் பிரதமர் மோடி மற்றும் சுந்தர் பிச்சை வீடியோ கால் பேச்சுவார்த்தை மாபெரும் வெற்றி அடைந்துள்ளது
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பிக்சல் ஃபோன்கள் 2024 ஆம் ஆண்டில் கிடைக்கும் என்று கூகுளின் டிவைசஸ் மற்றும் சர்வீசஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ரிக் ஆஸ்டர்லோ (Rick Osterloh) Google for India கூட்டத்தில் கூறினார்.
இதற்காக, கூகுள் பிக்சல் போன்களுக்கான வன்பொருளை இந்தியாவில் தயாரிக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், அமைப்புகளுடன் கூகுள் கூட்டு சேர்ந்துள்ளது. கூகுள் தற்போது பல சேவைகளுக்காக பல நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையும், யாரையும் உறுதி செய்யாத நிலையிலும் இந்த நிறுவனங்களின் பெயர்களை பகிரவில்லை.
ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் படி கூகுள் நிறுவனம் லாவா இன்டர்நேஷனல் லிமிடெட், டிக்சன் டெக்னாலஜிஸ் இந்தியா மற்றும் ஃபாக்ஸ்கானின் இந்தியப் பிரிவான பாரத் எஃப்ஐஎச் போன்ற முக்கிய இந்திய சப்ளையர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த மாத துவக்கத்தில் கூகுள் அறிமுகம் செய்த Google Pixel 8 ஸ்மார்ட்போன் விலை 75,999 ரூபாய், Pixel 8 Pro ஸ்மார்ட்போன் விலை 1,06,999 ரூபாய். இவை இரண்டும் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications