வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு மின்னஞ்சலை அனுப்பி உள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன. குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று மீண்டும் அமெரிக்க அதிபராகியுள்ளார். இதனிடையே கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் ," தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, ஒவ்வொரு பின்னணி மற்றும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கும் நம்பகமான தகவல் ஆதாரமாக கூகுள் தான் இருக்க வேண்டும்" என அந்த மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி அங்கே செயல்பட்டு வரக்கூடிய டெக் நிறுவனங்கள் நம்பகமான தகவல்களை வழங்க வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
ஏனெனில் அதிபராக தேர்வாகி இருக்கக்கூடிய டொனால்ட் தொடர்ந்து இந்த டெக் நிறுவனங்களுக்கு எதிராகவே பேசி வருகிறார். குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்த டொனால்ட் டிரம்ப், தான் தேர்தலில் வெற்றி பெற்றால் கூகுள் தேடுபொறி நிறுவனத்தின் மீது விசாரணை நடத்துவேன் என தெரிவித்திருந்தார். கூகுள் தளத்தில் தன் பெயரை உள்ளீடு செய்தாலே தன்னைப் பற்றிய தவறான செய்திகள் மட்டுமே காட்டுகின்றன என டொனால்ட் டிரம்ப் அப்போது சாடி இருந்தார் .
மேலும் கூகுள் நிறுவனம் முறைகேடாக தங்களுடைய அமைப்புகளை மாற்றி அமைத்து தன்னை பற்றிய தவறான தகவல்கள் மட்டுமே தேடு பொறியில் காட்டும் படி செய்து இருக்கிறது என கூறிய அவர் தன்னைப் பற்றிய தவறான தகவல்களையும் கமலா ஹாரிஸ் பற்றிய நல்ல தகவல்களையும் மட்டுமே கூகுள் காட்டுவதாக கூறியிருந்தார்.
இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் எனக் கூறியிருந்த அவர் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கூகுள் நிறுவனத்தின் மீது விசாரணை நடத்துவேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு இப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பி இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய எக்ஸ் பதிவுகளில் தன்னைப் பற்றிய எதிர்மறையான செய்திகளை கூகுள் தொடர்ந்து வெளியிட்டு வந்ததாகவும் குற்றம் சாட்டினார் ,ஆனால் கூகுள் நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
More From GoodReturns

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

ஈரான் போரில் முக்கிய திருப்பம்: பாதுகாப்பு படை தலைவர் கொலை.. நூலிழையில் உயிர் தப்பிய கமேனி மகன்!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

சாயம் வெளுக்க துவங்கியது.. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது.. அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பால் ஷாக்..!!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!



Click it and Unblock the Notifications