உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை-க்கு இன்று பிறந்த நாள். ஜூன் 10, 1972 ஆம் ஆண்டு பிறந்த சுந்தர் பிச்சை-க்கு இன்று 51 வயதாகிறது.
மதுரையில் பெரிய அளவிலான பணம், வசதிகள் இல்லாத குடும்பத்தில் பிறந்து வெறும் கல்வியை மட்டுமே நம்பிய சுந்தர் பிச்சை இன்று உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்துள்ளார்.

இவருடைய வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்தினாலும் இவர் எளிமையாக இருப்பதையே விரும்புவார். இந்நிலையில் சுந்தர் பிச்சை-யின் காதல் கதைக்கும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்திற்கும் ஒரு கனெக்ஷன் உள்ளது.
சுந்தர் பிச்சை-யின் ப்ரொபஷனல் வாழ்க்கை குறித்து பேசினால் நாள் முழுவதும் பேசலாம், ஆனால் அவருடைய அழகான பர்சனல் லைப் சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது. குறிப்பாக அவருடைய காதல் கதை.
சுந்தர் பிச்சை மற்றும் அஞ்சலி பிச்சை காதல் கதை கல்லூரியில் தொடங்கியது, காரக்பூரில் உள்ள IIT கல்லூரியில் இருவரும் சந்தித்தனர். சுந்தர் பிச்சை மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தார், அதே பேட்சில் அஞ்சலி-யும் இருந்தார்.
இருவரும் நண்பர்களாக தங்கள் பயணத்தைத் தொடங்கி, பின்னர் காதலர்கள் ஆனார்கள். அதை தொடர்ந்து கணவன் மனைவியாக உயர்ந்துள்ளனர். ஐஐடி கல்லூரியில் படிக்கும் வரையில் சுந்தர் பிச்சை - அஞ்சலிக்கும் எந்த பிரச்சனைுயும் இல்லை. ஆனால் கல்லூரி முடிந்த பின்பு சுந்தர் பிச்சை இந்தியாவை விட்டு அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்றார், இதேவேளையில் அஞ்சலி இந்தியாவில் பணியாற்றி இருந்தார் இதனால் இருவருக்கும் மத்தியிலான இடைவெளி அதிகரித்தது.
இருவரும் தங்களின் வேலையை செய்து கொண்டிருப்பதாலும், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இல்லாததாலும், திருமணத்தைப் பற்றி பேசாமலும், 6 மாதங்கள் எவ்விதமான தொடர்பும் இல்லாமல் இருந்தனர்.
இந்த நிலையில் அஞ்சலி சற்றும் எதிர்பார்க்காமல் அமெரிக்கா சென்று சுந்தர் பிச்சை-ஐ சந்தித்தார். அந்த நேரத்தில் சுந்தர் பிச்சை அமெரிக்காவில் செமிகண்டக்டர் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். அமெரிக்காவில் வாழ்க்கையை துவங்க போதுமான சம்பளம் சுந்தர் பிச்சை பெற்றதால் இவரும் அவர் பெற்றோரிகளிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க கோரினர்.
பெற்றோர்களும் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்த காரணத்தால் சுந்தர் பிச்சை மற்றும் அஞ்சலி இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு புதுமணத் தம்பதிகளாக அமெரிக்காவில் வாழ்க்கையை துவங்கினர். அன்று முதல் சுந்தர் பிச்சை வாழ்க்கையில் ஏறுமுகம் தான்.
சுந்தர் பிச்சை, அஞ்சலி பிச்சை தற்போது அமெரிக்காவில் லாஸ் ஆல்டோஸ் மலை பகுதியில் மிகப்பெரிய ஆடம்பர வீட்டில் வசிக்கின்றனர். இவர்களுக்குக் காவியா பிச்சை, கிரன் பிச்சை என இரு பிள்ளைகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications