ரூ. 2,100 கோடி சம்பாதித்த சுந்தர் பிச்சை! கூகுள் ஊழியர்களை விட இது எத்தனை மடங்கு அதிகம்?

ஒரு சில கம்பெனிகளின் பெயரைச் சொன்னாலே, பிறந்த குழந்தைக்கு கூடத் தெரியும். உலகில் மிகச் சில கம்பெனிகளுக்கு மட்டுமே இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அப்படிப்பட்ட பிராண்ட்களில் கூகுள் நிறுவனமும் ஒன்று என்றால் அது மிகை இல்லை.

அப்படிப்பட்ட கூகுள் கம்பெனியில் ஒரு சுவாரஸ்யமான விவரம் வெளியாகி இருக்கிறது. அதைத் தான் பார்க்கப் போகிறோம்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

நம் சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்துக்கு மட்டுமல்ல, கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபபெட் (Alphabet) கம்பெனிக்கும் அவர் தான் முதன்மைச் செயல் அதிகாரியாக (CEO) இருக்கிறார். இதில் நிச்சயமாக தமிழர்கள் பெருமைபட்டுக் கொள்ளலாம். இவர் இவர் கடந்த ஆண்டு எவ்வளவு சம்பாதித்து இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டால் இன்னும் மகிழ்ச்சி அடைவதை விட பொறாமைப்படுவீர்கள்.

சம்பாத்தியம்

சம்பாத்தியம்

சுந்தர் பிச்சைக்கு கடந்த 2019-ம் ஆண்டு சம்பளமாக 6.5 லட்சம் டாலர் கொடுத்து இருக்கிறார்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமாராக 4.87 கோடி ரூபாய். அது போக, கூகுள் நிறுவன பங்குகள் கொடுத்தது... போன்ற வருமானங்களை எல்லாம் சேர்த்தால், 2019-ல் சுமாராக 2,100 கோடி ரூபாய் பெற்று இருக்கிறார்.

1085 மடங்கு அதிகம்

1085 மடங்கு அதிகம்

அடேங்கப்பா, ஒரு வருஷத்துல 2,100 கோடியா..? என வாய் பிளக்கிறீர்களா..! சரி, இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயத்தையும் சொல்கிறோம். கூகுளில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட, நம் சுந்தர் பிச்சை 1,085 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறாராம். ஆத்தாடி இது என கணக்கு?

கணக்கு

கணக்கு

அதாவது கூகுளில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சராசரி வருமானம் 1.93 கோடி ரூபாய். ஆனால் நம் சுந்தர் பிச்சையோ அதைவிட 1,085 மடங்கு (1.93 * 1085) = 2,100 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார். இந்த கணக்கு எல்லாம் போக, இந்த வருடம் சுந்தர் பிச்சையின் சம்பளத்தை அதிகரிக்கப் போகிறார்களாம்.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

கடந்த 2019-ல் 6.25 லட்சம் டாலராக இருந்த சம்பளம், இந்த 2020-ம் ஆண்டுசுமாராக 20 லட்சம் டாலராக உயரலாம் எனவும் கூகுள் தரப்பில் இருந்தே செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இன்னும் நம் சுந்தர் பிச்சை காட்டில் எவ்வளவு மழை பொழியப் போகிறதோ தெரியவில்லை. இப்ப சொல்லுங்க சுந்தர் சம்பளத்தை பார்க்கும் போது பெருமைப்படுவதோடு கொஞ்சம் போறாமையாகவும் இருக்குதுல்ல.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+