உலக நாடுகளில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் போதுமான பணம் இல்லாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் மலை மலையாய் பணத்தை குவித்து வைத்திருக்கும் கூகுள் லாபத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் ஓரே காரணத்திற்காக தனது மொத்த ஊழியர்களில் சுமார் 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் திட்டமிட்டு சுமார் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் பல லட்சத்தில் இருந்து பல கோடி ரூபாய் வரையிலான சம்பளம் வாங்கினாலும் பலரின் பணிநீக்கம் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போடும் நேரத்தில் நடந்துள்ளது. உதாரணமாக பிரிட்டனில் பணியாற்றிய ஒரு இந்திய ஊழியர் பதவி உயர்வு பெற்று சுவிஸ் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட சில நாட்களிலேயே பணிநீக்க செய்யப்பட்டு உள்ளார்.

இப்படி பிரசவத்திற்கு சென்ற பெண் ஊழியர்கள், தாயின் மரணத்திற்காக விடுப்பில் சென்ற ஊழியர், மருத்து சிகிச்சைக்காக விடுப்பில் சென்ற ஊழியர் என பலரும் மோசமான நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சிக்னல் கொடுத்துள்ளார் கூகுள், ஆல்பபெட் சிஇஓ சுந்தர் பிச்சை.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கைக்கு கூகுள், ஆல்பபெட் சிஇஓ சுந்தர் பிச்சை பேட்டி கொடுத்தபோது பணிநீக்கம் இருக்கும் என்பதை நேரடியாக அறிவிக்காவிட்டாலும், மறைமுகமாக சிக்னல் கொடுத்துள்ளார். கூகுள் தற்போது மிகவும் தீவிரமாக சேட்பாட் Bard-ல் பணியாற்றுவது மட்டும் அல்லாமல் ஜிமெயில், கூகுள் டாக்ஸ் போன்ற முக்கியமான வொர்க்ஸ்பேஸ் திட்டத்திலும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
கூகுள் நிர்வாகம் தற்போது முக்கிய இலக்குகளை கொண்டு இயங்கி வருவது மட்டும் அல்லாமல் பல முக்கிய சேவைகளில் அதிகளவிலான மேம்பாடுகளை செய்யும் பணிகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் ஒவ்வொரு துறையிலும் என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த செலவில் சிறப்பான ஊழியர்கள் செயல்திறனை கொண்டு வருவதில் இலக்காக கொண்டு இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications