ஆல்பாபெட் மற்றும் கூகுள் சிஇஓ ஆக இருக்கும் சுந்தர் பிச்சை ஞாயிற்றுக்கிழமை தனது தீபாவளி வாழ்த்துக்களை இந்திய மக்களுக்குத் தெரிவித்ததுடன், தீபாவளி குறித்து அறிந்துகொள்ள மக்கள் அதிகமாகத் தேடிய Why என்று துவங்கும் சில கேள்விகள் டிராண்டாகிறது எனத் தனது X பக்கத்தில் தெரிவித்தார்.
சுந்தர் பிச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! கூகுள் சர்ச்-ல் தீபாவளி மரபுகள் பற்றி அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் உலகளவில் அதிகளவில் தேடப்படும் Why எனத் துவங்கும் சில கேள்விகளை இங்கே பாருங்க என ஒரு இணைப்பை சேர்த்துள்ளார்.

இந்த இணைப்பில் தீபாவளி குறித்த மக்கள் அதிகம் தேடும் முக்கியக் கேள்விகளைத் தீப திருநாளில் தீபத்தின் வாயிலாகவே மக்களுக்குத் தெரிவித்துள்ளார். தீபத்தில் 1-5 எண்கள் குறிப்பிட்டு டாப் 5 கேள்விகளைப் பதிவிட்டு உள்ளார்.
இந்தியர்கள் ஏன் தீபாவளி கொண்டாடுகிறார்கள், நாம் ஏன் தீபாவளி அன்று ரங்கோலி போடுகிறோம், தீபாவளி அன்று ஏன் விளக்கு ஏற்றுகிறோம், தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வது ஏன் மற்றும் தீபாவளியில் எண்ணெய் குளியல் ஏன் போன்ற 5 கேள்விகளுக்கான விடையை மக்கள் அதிகம் தேடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவை தொடர்ந்து பலரும் சுந்தர் பிச்சை தீபாவளி வாழ்த்து கூறியும், கூகுள் டூடில் கேட்டும் பதிவிட்டனர். சுந்தர் பிச்சையை தொடர்ந்து டிவிட்டரில், ஆப்பிள் சீஇஓ டிம் குக் இந்தியர்களுக்குத் தீபாவளி வாழ்த்துக்களைக் கூறி, ஐபோன் 15 போனில் எடுத்த போட்டோவை பதிவிட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த 30 நாட்களில் இந்திய மக்கள் கூகுளில் அதிகம் தேடிய முக்கியமான விஷயங்களைத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் தனிப்பட்ட முறையில் திரட்டியுள்ளது. இதில் அதிகப்படியானோர் தேடிய ரங்கோலி டிசைன் தான்.

தீபாவளி தேதி
2023 தீபாவளி தேதி
ரங்கோலி
தீபாவளி அலங்காரம்
தீபாவளி சலுகை
தீபாவளி விற்பனை
தீபாவளி கிஃப்ட்
2023 தீபாவளிக்கான ரங்கோலி டிசைன்
2023 தீபாவளிக்கான ரங்கோலி டிசைன்கள்
2023 தீபாவளிக்கான ரங்கோலி
தீபாவளி வாழ்த்துகள் மேற்கோள்கள்
தீபாவளி ரங்கோலி டிசைன்கள் 2023
தீபாவளிக்கு எளிதான ரங்கோலி டிசைன்கள்
தீபாவளிக்கான ரங்கோலி டிசைன்கள்
ரங்கோலி டிசைன்கள்
அலுவலகத்திற்கான தீபாவளி அலங்கார யோசனைகள்
தீபாவளி ரங்கோலி டிசைன்கள்


Click it and Unblock the Notifications