மதுரையில் பிறந்து, சென்னையில் வளர்ந்த கூகுள் நிறுவனரான சுந்தர் பிச்சை, அமெரிக்க நிறுவனங்களை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் இந்திய வம்சாவளி தலைமை செயல் அதிகாரிகளில் மிகவும் முக்கியமான ஒருவர்.
51 வயதான பிச்சை, சமீபத்தில் யூடியூபர் வருண் மாயாவுடன் ஒரு குறுகிய பாட்காஸ்டில் கலந்துரையாடினார், இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வருண் மாயாவுடன் உடன் பாட்காஸ்ட்டில் சுந்தர் பிச்சை, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம், இந்திய பொறியாளர்களுக்கு அவரது அறிவுரை, ஸ்டார்ட்அப்கள் பற்றிய அவரது பார்வை போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
இதேவேளையில் பாட்காஸ்ட் முடிவடைவதற்கு சற்று முன்னர் லைட்டர் நோட்டாக, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்குப் பிடித்த இந்திய உணவுகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
வருண் மாயா சுந்தர் பிச்சையிடம் இந்தியாவில் அவருக்கு பிடித்த உணவு என்னவென கேட்டார், இதற்குக் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி கொடுத்த பதில் பலராலும் பாராட்டப்பட்டாலும், தமிழ்நாட்டு மக்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்திய மக்கள் மத்தியில் அவரவர் மாநில மொழி, உணவு மீது அதிகப்படியான உணர்வு உள்ளது, இதை புரிந்துகொண்ட சுந்தர் பிச்சை பிராந்திய உணவுப் போரைத் தவிர்க்கும் வகையில், இந்தியாவின் மூன்று முக்கிய பெருநகரங்களான பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களில் இருந்து ஒவ்வொரு பிடித்த உணவைக் கூறினார்.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் இருக்கும்போது, தோசையை சாப்பிட விரும்புவதாக அவர் தெரிவித்தார். தேசிய தலைநகரான டெல்லியில், அவரது பிடித்த உணவு சோளே பட்டூரா. இறுதியாக, மும்பையில் பாவ் பாஜ்ஜி சாப்பிடுவேன் என்று மிகவும் தந்திரமாக பாட்காஸ்ட் தொகுப்பாளர் வருண் மாயாவிடம் சுந்தர் பிச்சை கூறினார்.
இதில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டு உணவு குறித்தும், சென்னை குறித்தும் பேசாதது சிறு வருத்தம் தான்.
பாட்காஸ்ட்-ல், இன்றைய இளைஞர்கள் FAANG (Facebook, Apple, Amazon, Netflix மற்றும் Google) நிறுவனங்களின் நேர்முகத் தேர்வை கிராக் செய்ய உதவும் வகையில் டிப்ஸ் கேட்டபோது, இதற்குப் பதில் அளித்த அமீர்கான் நடித்த "3 இடியட்ஸ்" படத்தைக் குறிப்பிட்டு, இளைஞர்கள் "விஷயங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் அப்போது தான் முழுமையான தெளிவு கிடைக்கும் எனக் கூறினார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications