மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு.. என்ன பேசினார் தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை இந்திய வந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.

சுந்தர் பிச்சை இந்தியப் பயணத்திற்குப் பல முக்கியமான காரணங்கள் உள்ள நிலையில், மோடியுடனான சந்திப்பும் பல எதிர்பார்ப்புகளை எழுப்புகிறது.

இந்த நிலையில் திங்கட்கிழமை மாலையில் பிரதமர் மோடியைச் சுந்தர் பிச்சை சந்தித்துப் பேசுகையில் இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

சீனாவின் அந்த ஒற்றை நடவடிக்கை.. 2013-க்கு பிறகு மோசமான சரிவு.. ஜின்பிங் அரசுக்கு மீண்டுமொரு சவால்! சீனாவின் அந்த ஒற்றை நடவடிக்கை.. 2013-க்கு பிறகு மோசமான சரிவு.. ஜின்பிங் அரசுக்கு மீண்டுமொரு சவால்!

சுந்தர் பிச்சை - மோடி

சுந்தர் பிச்சை - மோடி

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்தது சுந்தர் பிச்சை தனது டிவிட்டரில் பக்கத்தில் பிரதமர் மோடி உடனான சந்திப்புப் புகைப்படத்தைப் பகிர்ந்த சுந்தர் பிச்சை உங்கள் தலைமையின் கீழ் தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக உள்ளது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.

இந்தியாவின் G20 தலைவர் பதவிக் காலம்

இந்தியாவின் G20 தலைவர் பதவிக் காலம்

நம்முடைய வலுவான கூட்டாணி தொடரவும், இந்தியாவின் G20 தலைவர் பதவியை ஆதரிக்கவும், அனைவருக்கும் பயன் தரும் வகையில் ஒப்பன், இணைக்கப்பட்ட இண்டர்நெட் சேவையை ஆதரிக்கிறோம் என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

கூகுள் ஃபார் இந்தியா 2022

கூகுள் ஃபார் இந்தியா 2022

இந்தியாவிற்கு வந்துள்ள சுந்தர் பிச்சை கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்வில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுடன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் சுந்தர் பிச்சை செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்காலத்திற்கான கூகுளின் பார்வை குறித்துப் பேசினார்.

அஷ்வினி வைஷ்ணவ்

அஷ்வினி வைஷ்ணவ்

இந்தியா ஒரு பெரிய ஏற்றுமதி பொருளாதாரமாக இருக்கும் என்றும், நாட்டில் தொழில்நுட்ப மாற்றத்தின் வேகம் அசாதாரணமானது என்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை திங்கட்கிழமை கூறினார்.

வாய்ப்புகள் ஏராளம்

வாய்ப்புகள் ஏராளம்

கூகுள் இந்தியா நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் பிச்சை, இந்தியாவில் இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று கூறினார். மேலும் எனது அடுத்த இந்திய பயணம் குறித்து இப்போதே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூகுள் தலைவர் கூறினார்.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டிய பேசிய சுந்தர் பிச்சை. மத்திய அரசின் இந்த முயற்சி காரணமாக நாடு முழுவதும் கூகுள் நிறுவனம் மற்றும் அதன் சேவை முன்னேற்றத்தை விரைவுபடுத்த உதவி வருகிறது என்றும் பேசியுள்ளார்.

கூகுள் இந்தியா கூட்டம்

கூகுள் இந்தியா கூட்டம்

2023ல் ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்கும் நிலையில் உலக நாடுகளுடன் அணுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கூகுள் இந்தியா நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பேசினார்.

பத்ம பூஷன் விருது

பத்ம பூஷன் விருது

இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுந்தர் பிச்சை-க்கு வழங்கப்பட்டது. மதுரையில் பிறந்த சென்னையில் வளர்ந்த சுந்தர் பிச்சைக்கு வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

சான் பிரான்சிஸ்கோ

சான் பிரான்சிஸ்கோ

அவர் டிசம்பர் மாத தொடக்கத்தில் சான் பிரான்சிஸ்கோவில் இந்திய எம்பசியில் இந்த விருதைப் பெற்றார். இந்த விருதை பெற்ற கையோடு டிவிட்டரில் இந்த மகத்தான கவுரவத்திற்காக நான் இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

ஆல்பாபெட் மற்றும் கூகுள்

ஆல்பாபெட் மற்றும் கூகுள்

உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான ஆல்பாபெட் மற்றும் கூகுள்-ன் சிஇஓ-வான சுந்தர் பிச்சை திங்கட்கிழமை காலையில் செய்த டிவிட்டரில் கலக்கலான ஒரு விஷயத்தைத் தெரிவித்தார்.

FIFA உலகக் கோப்பை

FIFA உலகக் கோப்பை

கூகுள் தேடுதல் தளத்தில் கடந்த 25 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக ட்ராஃபிக்கை FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது பதிவு செய்ததாகக் கூறினார். சுந்தர் கிரிக்கெட் ரசிகர் என்றாலும் புட்பால்-ஐ தான் அதிகம் விரும்பும் விளையாட்டு எனப் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google CEO Sundar Pichai meets PM Modi; Tweets on Indis rapid pace of technological change

Google CEO Sundar Pichai meets PM Modi; Tweets on Indis rapid pace of technological change
Story first published: Monday, December 19, 2022, 22:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X