அடிச்சிக்காதீங்க.. சென்னையில் நான் படித்த பள்ளி இதுதான்.. உண்மையை உடைத்த சுந்தர் பிச்சை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இறுதியாகத் தான் படித்த பள்ளி பற்றிய தகவலை தமிழ்நாட்டு மக்களுக்கும், சென்னை பள்ளிகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

சுந்தர் பிச்சை-யின் இந்த விளக்கம் தற்போது இணையத் தளத்தில் வைரலாகி வருவது மட்டும் அல்லாமல் பலர், சுந்தர் பிச்சை படித்த பள்ளியைப் பற்றியும் இணையத்தில் தேடி வருகின்றனர்.

சம்பளம், பதவி உயர்வில் துளியும் திருப்தி இல்லை.. கூகுள் ஊழியர்கள் பதிலால் சுந்தர் பிச்சை ஷாக்..!

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க்-ன் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்ட போது, பல கல்வி நிறுவனங்கள் சுந்தர் பிச்சை தங்கள் பள்ளியில் படித்தவர் என்று சொந்தம் கொண்டாடினர். இதனால் முதல் பலர் விளம்பரம் தேட நினைத்தாலும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. ஏன் தெரியுமா..?

350 விக்கிபீடியா திருத்தங்கள்

350 விக்கிபீடியா திருத்தங்கள்

தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ-வாக அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் அவருடைய விக்கிபீடியா பக்கத்தில் பள்ளி விபரங்களில் மட்டும் சுமார் 350 திருத்தங்கள் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அந்த அளவிற்குத் தமிழ்நாட்டு மக்களும், தமிழகப் பள்ளிகளும் சுந்தர் பிச்சை-யை தனது பள்ளி மாணவர் எனப் பெருமைகொள்ள நினைத்தனர்.

முன்மாதிரி
 

முன்மாதிரி

சுந்தர் பிச்சை ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மட்டுமல்ல, உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவை அனைத்தையும் தாண்டி பல கோடி தமிழக இளைஞர்களின் முன்மாதிரியாகவும் திகழ்கிறார்.

குழப்பம்

குழப்பம்

சுந்தர் பிச்சையின் கல்லூரி படிப்பு குறித்து அவருடைய லின்கிடுஇன் மற்றும் பிற தளத்தில் தெளிவாக இருந்தாலும், பள்ளி கல்வி குறிக்த விபரங்கள் இல்லாதது தான் விக்கிபீடியா பக்கத்தில் 350 திருத்தங்கள் செய்யப்பட முக்கியக் காரணம். இந்தக் குழப்பத்தைச் சுந்தர் பிச்சையே தீர்த்து வைத்துள்ளார்.

ஸ்டான்போர்ட் கல்லூரி

ஸ்டான்போர்ட் கல்லூரி

ஸ்டான்போர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃ பிசினஸில் கல்லூரியின் நேர்காணலின் கலந்துக்கொண்ச போது, சுந்தர் பிச்சையிடம் அவரது பள்ளி பற்றியும், விக்கிபீடியா பக்கத்தில் குறிப்பிடப்பட்ட பள்ளிகளின் பட்டியலை அவருக்குக் காட்டப்பட்டது.

வன வாணி பள்ளி

வன வாணி பள்ளி

அதற்கு, விக்கிபீடியாவில் வந்த பெயர்களில் இரண்டு பெயர்கள் சரியானவை என்று கூறிய சுந்தர் பிச்சை, சென்னையில் உள்ள வன வாணி பள்ளியில் தான் பள்ளிக் கல்வியை முடித்ததாகவும் கூறினார். இந்தப் பள்ளி ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது விக்கிப்பீடியாவில் சரியான தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஐஐடி காரக்பூர்

ஐஐடி காரக்பூர்

சுந்தர் பிச்சையின் உயர் கல்வியைப் பொறுத்த வரையில், காரக்பூரில் உள்ள ஐஐடியில் சேர்ந்து உலோகவியல் பொறியியல் பிரிவில் பி டெக் பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு, அவர் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் எம்எஸ் படிப்பதற்காக அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், பின்னர்ப் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ படித்துப் பட்டம் பெற்றார்.

2014 முதல்

2014ல் கூகுள் கிளையன்ட் சாப்ட்வேர் ப்ராடெக்ட் பிரிவில் சேர்ந்து இன்று ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்துள்ளார். இவரது தலைமையில் தான் கூகுள் ட்ரைவ், கூகுள் க்ரோம் ஓஎஸ் போன்ற பல திட்டங்கள் இவரது தலைமையில் தான் உருவாக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google CEO Sundar Pichai reveals school name he went in Chennai

Google CEO Sundar Pichai reveals school name he went in Chennai அடிச்சிக்காதீங்க.. சென்னையில் நான் படித்த பள்ளி இதுதான்.. உண்மையை உடைத்த சுந்தர் பிச்சை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X