டெல்லி: தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட சுந்தர் பிச்சை, உலகின் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அந்த நிறுவனம் அறிவித்தது.
இந்த பதவி உயர்வு மட்டுமா? சம்பள உயர்வு வேண்டாமா? என்ற நிலையில் தான், முன்னதாக சுந்தர் பிச்சைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அவரது சம்பளமும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது.
சம்பளம்+ஊக்கத் தொகை
ஆல்பாபெட் மற்றும் கூகுளின் சிஇஓ ஆக உள்ள சுந்தருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகள் (இந்திய மதிப்பில் 1,707 கோடி ரூபாய்) ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பங்கு ஊக்கத் தொகையானது நிறுவனத்தின் பங்கு சார்ந்த உரிமைகள் ஆகும். இதுபோக ஆண்டுக்கு சுமார் 14 கோடி ரூபாய் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை
இந்த நிறுவனத்தின் செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படுவது ஆல்பாபெட் வரலாற்றில் இது தான் முதல்முறை என்றும் கூறப்படுகிறது. மிகப்பெரிய அளவிலான தொகையைப் பரிசாகப் பெறுவது சுந்தர் பிச்சைக்குப் புதிதல்ல. கடந்த 2016-ல், பங்குச் சந்தையில் நிறுவனத்தின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு 200 மில்லியன் அமெரிக்க டாலர் அவருக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை நிராகரிப்பு
கடந்த ஆண்டு அதிகமாக சம்பளம் பெற்றதாக உணர்கிறேன் என்றுகூறி தனக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையை அவர் நிராகரித்தார். இந்த நிலையில் இந்த ஊக்கத் தொகையை அவர் ஏற்றுக் கொள்வாரா? இதுபோக, அவர் தொடர்ந்து இதே நிறுவனத்தில் பணியாற்றினால் ஆண்டுக்கு இரு பிரிவுகளாக 120 மில்லியன் (853 கோடி ரூபாய்) மற்றும் 30 மில்லியன் (213 கோடி ரூபாய்) ஸ்டாக் க்ராண்ட் ஆக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.
சுந்தர் பிச்சைக்கு புகழாரம்
கடந்த 2004-ம் ஆண்டு கூகுளில் சாதாரண ஒரு ஊழியராகத் தனது பணியைத் தொடங்கிய சுந்தர் பிச்சையின் வளர்ச்சி சர்வதேச அளவில் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, ஒரு அசுர வளர்ச்சியாக உள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஆல்பாபெட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின், அப்பதவியிலிருந்து விலகியபோது, சுந்தர் பிச்சை குறித்து கூகுளையும் ஆல்பாபெட் நிறுவனத்தையும் இவரைவிட எவராலும் சிறப்பாக வழிநடத்திட முடியாது என ஊழியர்களுக்கு கடிதமும் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications