டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அக்டோபர் 9ஆம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையும் ஒருவர்.
சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், தான் கடைசியாக ரத்தன் டாடாவை கூகுள் அலுவலகத்தில் தான் சந்தித்தேன், அப்போது இருவரும் Waymo-வின் முன்னேற்றம் குறித்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். ரத்தன் டாடா-வின் தொழில் மற்றும் நன்கொடைகள் சார்ந்த பணிகள் மிகவும் வியப்புக்குரியது என்றும், அவர் இந்தியாவின் நவீன தொழில்துறையை உருவாக்கவும், அதை தொடர்ந்து மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தார் என்றும் சுந்தர் பிச்சை ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளார்.

ரத்தன் டாடா இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் என்றும், அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
ரத்தன் டாடா, டாடா குழுமத்தை உலகளாவிய அளவில் முன்னணி தொழில்துறை குழுமமாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் பல தொழில்களில் முதலீடு செய்து, இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தார். ரத்தன் டாடாவின் மறைவு, இந்திய தொழில்துறையில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பிறந்த ரத்தன் டாடா-வுக்கு இளமை காலம் மிகவும் கசப்பாக இருந்தது, இளமை காலத்தை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் கடந்து வந்த ரத்தன் டாடாவுக்கு அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்பது ஆசை, ஆனால் அவரின் தந்தையோ லண்டனுக்கு சென்ற படிக்க உத்தரவிட்டார்.
தந்தையின் உத்தரவை தாண்டி, பாட்டியின் உதவியுடன் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியலில் பட்டம் பெற்றார், இது அவரது எதிர்கால தொழில் முயற்சிகளுக்கு இது முக்கிய வாய்ப்பாக அமைத்தது. பட்டம் பெற்ற கையோடு அவருக்கு IBM நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதை தூக்கிப்போட்டுவிட்டு இந்தியாவுக்கு பறந்தார்.

ரத்தன் டாடா, இந்தியாவின் ஜம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீலின் வொர்க்ஷாப் தளத்தில் பணிபுரியத் தொடங்கினார், அங்கு அவர் ஸ்டீல் தொழிலின் உள்ளேயும் வெளியேயும் செயல்பட்டார். பின்னாளில் இந்தியாவில் தொழிற்துறை போக்கை வடிவமைக்கும் முக்கிய சக்தியாக மாறினார்.


Click it and Unblock the Notifications