AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் மிக வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. மனிதர்கள் செய்து வந்த பல்வேறு வேலைகளும் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் வசம் சென்று விட்டன. மனிதர்கள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக செய்யக்கூடிய வேலைகள் படிப்படியாக ஏஐ தொழில்நுட்பம் மற்றும் ஏஐ ஏஜென்ட்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றன .
கால் சென்டர் வேலைகள் , கஸ்டமர் சர்வீஸ் வேலைகள் ,ஹெச்ஆர் ,கோடிங் உள்ளிட்டவை மனிதர்கள் வசம் இருந்து ஏஐ வசம் சென்ற வண்ணம் இருக்கின்றன . அண்மையில் கூட கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஏஐ தொழில்நுட்பத்தால் என்னுடைய வேலைக்கு ஆபத்து இருக்கிறது என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். கூடிய விரைவில் என்னைப் போன்றவர்களின் சிஇஓ வேலைகளை கூட ஏஐ பறித்து கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என அவர் கூறியிருந்தார்.

அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பத்தால் அனைத்து மட்டங்களில் இருப்பவர்களின் வேலை வாய்ப்புகளும் பறிபோகும் என்ற சூழல் தற்போது உருவாகிவிட்டது. இந்த நிலையில் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மேலும் ஒரு அதிரடியான கருத்தை வெளியிட்டு இருக்கிறார். ஏஐ தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி தனக்குள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அதை நினைத்தால் இரவு நேரங்களில் தனக்கு தூக்கமே வருவதில்லை என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
ஃபாக்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள சுந்தர் பிச்சை ஏஐ தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார். ஏஐ தொழில்நுட்பத்தில் நன்மைகளும் இருக்கின்றன தீமைகளும் இருக்கின்றன என சுட்டிக்காட்டி இருக்கும் அவர் ஏஐ தொழில்நுட்பம் வருங்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க உதவும் குறிப்பாக புற்றுநோய் போன்ற தீராத நோய்களுக்கு எல்லாம் மருந்து கண்டுபிடிப்பதில் ஏஐ முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்திருக்கிறார்.
அதே வேளையில் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சில நெகட்டிவ்வான விஷயங்களையும் கொண்டு வரும் அதை நினைத்தால் தனக்கு கஷ்டமாக இருக்கிறது என கூறியிருக்கிறார் . எந்த ஒரு தொழில்நுட்பத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என குறிப்பிட்டு இருக்கும் , அவர் ஒரு பக்கம் பாசிடிவ் ஆகவும் மற்றொரு பக்கம் நெகட்டிவ் ஆகவும் இருக்கும் என தெரிவித்திருக்கிறார் .
இது தவறான செயல்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ள அவர் டீப் ஃபேக் வீடியோக்கள் பெரிய பிரச்சினையாக வருவதற்கு வாய்ப்புள்ளது என கூறியிருக்கிறார் . டீப் ஃஏக் வீடியோக்கள் உண்மையான நபர்களைப் போலவே இருக்கிறது என்பதுதான் தன்னுடைய அச்சத்திற்கு காரணம் என தெரிவிக்கும் சுந்தர் பிச்சை, இந்த ஒரு விஷயம் தான் என்னை இரவு நேரங்களில் தூங்கவிடாமல் செய்கிறது என்கிறார்.
ஏஐ தவறான காரணங்களுக்கு பயன்படுத்தப்பட்டால் என்ன ஆகும் என்ற அச்சம் என்னை ஆட் கொண்டிருக்கிறது எனக் கூறியிருக்கிறார் . மனித சமூகத்திற்கு பலன் அளிக்க கூடியதாக ஏஐ தொழில்நுட்பம் இருக்க வேண்டும், இந்த தொழில்நுட்பமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் என கூறுகிறார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications