செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது . தற்போது ஏஐ நுழையாத துறையே இல்லை எனக் கூறும் அளவிற்கு ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக தன்னுடைய கிளைகளை பரப்பி விட்டது.
ஏஐ நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிமையாக இருக்கிறது என்றாலும் இது லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை வாய்ப்புகளையும் படிப்படியாக பறித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் டெக் நிறுவனங்கள் சுமார் 2 லட்சம் பேரை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன. இதற்கு பெரும்பான்மையான காரணமாக இருப்பது ஏஐ தொழில்நுட்பத்தின் வருகைதான் .

திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் நிறுவனங்கள் ஏஐ வசம் ஒப்படைத்துவிட்டு அந்த பணியில் இருந்த மனிதர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டன. நிறுவனங்களை பொறுத்தவரை இது ஒரு லாபகரமான நடவடிக்கை ஆனால் தொழிலாளர்கள் பார்வையில் இருந்து பார்க்கும்போது இது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் விஷயம்.
தினம்தோறும் ஏதேனும் ஒரு நிறுவனம் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை அறிவித்த வண்ணம் தான் இருக்கிறது. நாமும் அவற்றை செய்திகளில் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். ஆனால் இந்த மாற்றத்தை நம்மால் தடுக்கவே முடியாது என்பதுதான் நம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை என்கிறார் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை.
ஏஐ தொழில்நுட்பம் நம்முடைய பணிச்சூழல்களை எவ்வாறு மாற்றியுள்ளது என்பது குறித்து சுந்தர் பிச்சை பிபிசிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய எச்சரிக்கை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. உலக அளவில் வேலைவாய்ப்பு சந்தை தற்போது பெரிய மாற்றம் அடைந்திருக்கிறது ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு வேலைகளை தானியங்கு முறையில் செய்ய தொடங்கிவிட்டது , இந்த சமூகமும் படிப்படியாக ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளவும் தொடங்கிவிட்டது ,இத்தகைய சூழலில் எந்த ஒரு துறையும் ஏஐ இடம் இருந்து தப்பிக்க முடியாது என்கிறார் சுந்தர் பிச்சை .
குறிப்பாக ஒரே மாதிரியாக திரும்பத் திரும்பச் செய்யக்கூடிய வேலைகள் முழுவதுமாக ஏஐ வசம் சென்று விடும் எனக் கூறுகிறார். இனி மனிதர்கள் வேலை பார்க்கக்கூடிய முறை அடிப்படையிலேயே பெரிய மாற்றம் காணப் போகிறது என தெரிவித்திருக்கும் சுந்தர் பிச்சை இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என கூறியிருக்கிறார் .
ஏஐ தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளை பறிப்பது ஒருபுறம் இருந்தாலும் புதிய வேலை வாய்ப்புகளையும் அது உருவாக்குகிறது என கூறுகிறார். ஏஐக்கு ஏற்ற வகையில் நாம் நம்முடைய திறன்களை மேம்படுத்திக் கொண்டால் பணிநீக்கம் உள்ளிட்டவற்றிலிருந்து தப்பிக்க முடியும் என தெரிவிக்கிறார். ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு நிகராக இந்த உலகம் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்குகிறார் .
அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திற்குமே இந்த ஏஐ-ஆல் தூண்டப்பட்ட பொருளாதாரத்தில் முக்கிய பங்கு இருக்கிறது, அதற்கேற்ற வகையில் நம்முடைய இளைஞர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பும் இவர்களுக்கு தான் இருக்கிறது என கூறுகிறார் . ஏஐ தொழில்நுட்பம் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் செல்லாமல் அனைவருக்கும் செல்ல வேண்டும் என்றால் ஏஐ சார்ந்த திறன்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications