பில்லியனர் அந்தஸ்தை பெறுகிறார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

2015 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக சுந்தர் பிச்சை பதவி ஏற்றதில் இருந்து அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 400 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆல்பாபெட் இங்கின் சிஇஓவான சுந்தர் பிச்சை தனித்துவமான பயணத்தை கூகுளில் மேற்கொண்டுள்ளார்.

ஆல்பபெட் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் கணிப்புகளை மிஞ்சியதோடு அதன் கிளவுடு கம்ப்யூட்டிங் டிவிஷன் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் டெக்னாலஜியால் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.

பில்லியனர் அந்தஸ்தை பெறுகிறார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

அத்துடன் முதன்முறையாக டிவிடெண்டை வழங்கியுள்ளது.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவாக சுந்தர் பிச்சை உள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட பங்குகளின் மதிப்பு அதிகரித்ததால் 1 பில்லியன் டாலர் அளவுக்கு அவரது நிகர சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

சென்னையில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சையின் வாழ்க்கைப் பயணம் அசாதாரணமானதாகும். சிறுவயதில் அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் டிவி, கார் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய வசதிகள் கூட இல்லை. அவரது 12ஆவது வயதில்
முதல் போனை குடும்பம் வாங்கியது.

ஐடி துறை மீது சுந்தர் பிச்சைக்கு நாட்டம் வந்தது. அவரது தந்தை பிரிட்டிஷ் கார்ப்பொரேஷனான ஜிஇசியில் எலக்ட்ரிக் இன்ஜினியராகப் பணியாற்றி வந்தார். சுந்தர் பிச்சை நன்றாகப் படித்ததால் அவருக்கு ஐஐடி கரக்பூரில் படிக்க இடம் கிடைத்தது.

அங்கு இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த சுந்தர் பிச்சை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அத்துடன் அவரது தந்தை 1000 டாலர்களை அனுப்பினார். இந்தப் பணத்தை வைத்து அமெரிக்கா செல்வதற்கு சுந்தர் பிச்சை விமான டிக்கெட் எடுத்தார்.

2014இல் சுந்தர் பிச்சை அளித்த ஒரு பேட்டியில் எனது தந்தையும் தாயும் சிறந்த பெற்றோர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை எனக்காகத் தியாகம் செய்தனர். என்னையும் எனது சகோதரனையும் நன்றாகப் படிப்பதற்காக சம்பாத்தியத்தை செலவழித்தனர்.

மெக்கின்ஸி நிறுவனத்தில் ஒரு கன்சல்டன்ட்டாக தனது பயணத்தை சுந்தர் பிச்சை தொடங்கினார். பின்னர் பென்சில்வேனியாவின் வார்ட்டன் ஸ்கூலில் அட்வான்ஸ்டு டிகிரியை முடித்து விட்டு கூகுளில் புராடக்ட் மேனேஜராக 2004இல் வேலைக்கு சேர்ந்தார்.

கூகுள் குரோம், டூல்பார் புராஜக்ட்களில் முக்கியப் பங்கை சுந்தர் பிச்சை ஆற்றினார். கூகுளில் சுந்தர் பிச்சையுடன் பணியாற்றிய கேவல் தேசாய் கூறுகையில் அணிக்குள் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் சுந்தர் பிச்சை சிறப்பாக பணியாற்றினார் என்றார்.

சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த வென்சர் கேபிடல் நிறுவனமான ஷக்தியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக கேவல் தேசாய் இருக்கிறார். சுந்தர் பிச்சை எப்போதுமே தனது குரலை உயர்த்துவதில்லை. மற்றவர்களது கருத்துக்களுக்கு அவர் பெரிதும் மதிப்பு தருவார் என்றார் தேசாய்.

2015இல் கூகுளின் இணை நிறுவனர் லாரி பேஜால் தேர்வு செய்யப்பட்டார் சுந்தர் பிச்சை. பின்னர் தொடங்கப்பட்ட ஆல்பாபெட் இங்கின் சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.

கூகுளின் மற்றொரு இணை நிறுவனரான ஷெர்கெய் பிரின்னும் லாரி பேஜும் உலகின் 10 செல்வந்தர்களாக புளூம்பெர்க் கணித்துள்ளது.
2019இல் அன்றாட நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கிய சுந்தர் பிச்சை நிறுவனத்தின் புராடக்ட் தயாரிப்பு விரிவாக்கத்தில் கவனம் செலுத்தினார்.

சிஇஓவாக அவர் கூகுள் அசிஸ்டென்ட், கூகுள் ஹோம், கூகுள் பிக்சல், கூகுள் வொர்க்ஸ்பேஸ் மற்றும் பிற தயாரிப்புகள் உருவாகுவதற்கு முக்கியப் பங்கை சுந்தர் பிச்சை தந்தார். அத்துடன் அவர்தான் முதன்முதலாக ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் டெக்னாலஜியை கூகுளில் புகுத்தினார். அதை அவர் மிகப்பெரிய வாய்ப்பாகக் கூறினார்.

ஆல்பாபெட்டின் ஏஐ தயாரிப்புகள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகின. சில முதலீட்டாளர்கள் இந்த தயாரிப்புகள் ஓபன் ஏஐயை சமாளிக்குமா என்று கேட்டனர். ஆனால் தற்போது நிறுவனத்தின் அண்மைக்கால வருவாய் இந்த ஏஐ டெக்னாலஜியின் காரணமாகத்தான் வருகிறது
தற்போதைய நிலையுடன் சுந்தர் பிச்சையின் பங்கு நிலவரம் 424 மில்லியன் டாலர்களாக உள்ளது.

அவரது நிகர மதிப்பு 600 மில்லியன் டாலர்களாகும். இந்த சொத்துகளுக்கு வரி விதிக்கப்பட்டு மீண்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சுந்தர் பிச்சை பற்றி கேவல் தேசாய் கூறுகையில், பிச்சையின் பில்லியனரின் நிலை அவரது தலைமை முழுவதும் கூகுளுக்கு அவர் சேர்த்த மதிப்பை நினைவூட்டுகிறது.

என்னைப் பொறுத்தவரையில் அவர் பங்குதாரர்களால் சரியாகச் செய்தார் என்பதுதான். கூகுளின் பங்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டதால் அவர் பயனடைந்துள்ளார் என்றார்.

Story written by: I.jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+