Google: கூகுள் நிறுவனம் அதன் முக்கிய சேவைகளில் ஒன்றை அடுத்த வாரம் முதல் நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக நமக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதனை கூகுள் குரோமில் சென்று தான் தேடுவோம். இன்றைய காலகட்டத்தில் பல சேவைகள் வந்து விட்டாலும், கூகுள் குரோம் என்பதை மிக எளிதாக பயன்படுத்த முடியும். இதனாலேயே பலரும் இதனை பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய கூகுள் குரோமில் விரைவில் பல அப்டேட்களை கூகுள் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
கூகுள் குரோம் சேவையானது விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8/8.1 போன்ற இயங்குதளங்களைக் கொண்ட கம்ப்யூட்டர்களில் இயங்காது என்றும் கூறப்படுகின்றது.
கூகுள் குரோம் சேவை
ஆக கூகுள் குரோம் சேவைகளை பெற நீங்கள் இனி விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 11 போன்ற மேம்படுத்தப்பட்ட சேவைகளில் தான் பெற முடியும். கூகுள் நிறுவனம் நடத்திய வருடாந்திர நிகழ்வில், புதிய அம்சங்களைக் குறித்து அறிவித்தது. இதில் மருத்துவர்களின் மருந்துசீட்டை அறிந்து கொள்ளும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் மாடல் குறித்து வேலை செய்து வருவதாக கூறப்பட்டது.
யாருக்கு பாதிப்பு?
கூகுள் குரோமின் இந்த நிறுத்தத்தினால், பழைய லேப்டாப் மற்றும் பழைய கணினிகளை பயன்படுத்துபவர்கள் இனி கூகுள் குரோமினை பயன்படுத்த முடியாது. கூகுள் குரோமினை பயன்படுத்த வேண்டுமெனில் நீங்கள் உங்களது விண்டோஸை மாற்ற வேண்டியிருக்கும்.
விண்டோஸ் சேவை
கணினிகள் மற்றும் லேப்டாப்களில் பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் விண்டோஸ், முன்னதாக பிப்ரவரி 7. 2023ல் விண்டோஸ் 7, மற்றும் விண்டோஸ் 8.1-க்கான வெர்ஷன் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
விண்டோஸ் 7,2009ல் தொடங்கப்பட்டது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7-க்கான முக்கிய ஆதரவை நிறுத்தியது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 ஆகியவற்றிற்கான ஆதரவை மைக்ரோசாப்ட் தனது ஆதரவை ஜனவரி 10. 2023 வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் தான் இத்தகைய அறிவிப்பானது வந்துள்ளது.
எத்தனை பேர் பயன்பாடு?
தி வெர்ஜ் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு 100 மில்லியனுக்கும் அதிகமான கணினிகள் விண்டோஸில் இயங்குகின்றன. எனினும் பழைய வெர்ஷனை பயன்படுத்தும்போது. பல பாதுகாப்பு பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகின்றது. ஆக பல மில்லியன் பேரும் தங்களது விண்டோஸை அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications