எலான் மஸ்க் உடன் கள்ள உறவு.. தாங்கிக்கொள்ள முடியாத கூகுள் நிறுவனர்.. அடுத்த என்ன நடந்தது..?

உலகளாவிய பெரும் பணக்காரர்களின் திருமண வாழ்க்கை சற்றும் எதிர்பாராத மோசமான கட்டத்தில் முடிவுக்கு வருகிறது. அமேசான் ஜெப் பெசோஸ் துவங்கி எலான் மஸ்க், பில் கேட்ஸ் வரையில்.. தற்போது இந்த பட்டியலில் கூகுள் நிறுவனர் செர்கி பிரின்-ம் இணைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

எலான் மஸ்க் உடன் கூகுள் நிறுவனர் செர்கி பிரின் மனைவி நிக்கோல் ஷானஹான் கள்ள உறவு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இருவரின் விவாகரத்தும் மே 26 அன்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இருவரும் அவர்களுடைய 4 வயது மகளின் சட்டப்பூர்வ மற்றும் பிசிக்கல் பாதுகாப்பைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

எலான் மஸ்க் உடன் கள்ள உறவு.. தாங்கிக்கொள்ள முடியாத கூகுள் நிறுவனர்.. அடுத்த என்ன நடந்தது..?

இந்த நிலையில் செர்கி பிரின் மற்றும் நிக்கோல் ஷானஹான் விவாகரத்து குறித்து ஆவணங்கள் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமான விஷயங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இவர்களுடைய விவாகரத்து மீண்டும் செய்திகளில் இடம்பெற துவங்கியுள்ளது.

செர்கி பிரின் மற்றும் நிக்கோல் ஷானஹான் விவாகரத்து நீதிமன்ற ஆவணங்களின்படி, ஷானஹான் விவாகரத்துக்கு கோரிக்கை விடுக்கவில்லை, அதேவேளையில் விவாகரத்துக்கு பின்பு அவருடைய கணவரின் உதவியை கேட்டுள்ளார்.

மேலும் வழக்கு செலவுகள், வழக்கறிஞர் கட்டணம் மற்றும் சொத்துப் பிரித்தல் போன்ற பிற சிக்கல்களும் ரகசியமாக நீதிமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அலிமோனியாக எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை, இதனால் செர்கி பிரின் சொத்து மதிப்பு குறையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இருக்கும் போது பூதாகரமாக வெடித்த ஒரு விஷயம் தான் இது. கூகுள் இணை நிறுவனர் செர்கி பிரின்-ம் எலான் மஸ்க்-ம் நீண்ட கால நண்பர்கள். இதேபோல் செர்கி பிரின் மனைவியும் நிக்கோல் ஷானஹான்-ம் எலான் மஸ்க்-ம் நண்பர்கள்.

இந்த நிலையில் எலான் மஸ்க் உடன் நிக்கோல் ஷானஹான் கள்ள உறவு வைத்திருந்தது குறித்த விஷயத்தை அறிந்துக்கொண்ட செர்கி பிரின் அதிர்ந்து போனார், உடனே விவாகரத்து செய்ய முடிவு செய்த செர்கி கடந்த சில மாதங்களாக வழக்கறிஞரும் தொழிலதிபருமான நிக்கோல் ஷானஹானிடமிருந்து விவாகரத்த பெரும் பணிகளை அமைதியாக முடித்தார்.

செர்கி பிரின் மற்றும் நிக்கோல் ஷானஹான் இருவரும் 2015 இல் டேட்டிங் செய்யத் தொடங்கினர், அதே ஆண்டில் பிரின் தனது முதல் மனைவியான அன்னே வோஜ்சிகிக் உடன் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் 2018 இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

எலான் மஸ்க் விவகாரம் உட்பட பல்வேறு காரணத்தால் செர்கி பிரின் மற்றும் நிக்கோல் ஷானஹான் 2021 இல் பிரிந்து தனித்தனியாக வாழத் தொடங்கினர், அதன் பிறகு பிரின் 2022 இல் சரிசெய்துக்கொள்ள முடியாக கருத்து வேறுபாடுகள் காரணம் காட்டி விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.

இந்த நிலையில் 50 வயதான பில்லியனரும், கூகுள் இணை நிறுவனருமான செர்கி பிரின்-க்கு பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த ட்விட்டர் முன்னாள் சிஇஓ-வான எலான் மஸ்க் உடன் தனது மனைவிக்கு கள்ள தொடர்பு இருந்ததை தெரிந்துக்கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

ஆனால் நிக்கோல் ஷானஹான் மற்றும் மஸ்க் இருவரும் இதை மறுத்தனர். ஜூலை 25, 2022ல் எலான் மஸ்க் டிவிட்டரில் கள்ள தொடர்பு குறித்த செய்திக்கு பதில் அளிக்கும் வகையில், செர்கியும் நானும் நண்பர்கள், இருவரும் நேற்று இரவு தான் பார்ட்டி செய்தோம். கடந்த 3 வருடத்தில் நிக்கோல்-ஐ 2 முறை சந்தித்து இருப்பேன், இப்போது கூட பலரும் எங்களை சுற்றி இருந்தனர்.

இதேபோல் நிக்கோல் ஷானஹான்-ம் எலான் மஸ்க் உடனான கள்ள உறவு குறித்த பல கேள்விக்கு மறுப்பு தெரிவித்தார். எலான் மஸ்க் தனது வாழ்க்கையில் பலருடன் உறவில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+