உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள் சமீபத்தில் மிகப்பெரிய அளவிலான பணிநீக்கத்தை அறிவித்து அதன் ஊழியர்களை பயமுறுத்திய இதே நேரத்தில் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையை மிகவும் தீவிரமாக கையில் எடுத்தது.
இதன் ஒருபகுதியாக கூகுள் நிறுவனத்தின் பைனான்ஸ் பிரிவின் தலைவரான ரூத் போராட் சமீபத்தில் நிறுவனம் முழுவதும் ஊழியர்களுக்கான சேவைகளை குறைப்பது மூலம் செலவுகளை குறைக்க உள்ளதாக நிறுவனத்தின் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பினார்.
இந்த செலவின குறைப்பு என்பது மிகவும் பெரியது, பல வருட முயற்சி எனவும் தனது ஈமெயிலில் ரூத் போராட் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனத்தின் பைனான்ஸ் பிரிவின் தலைவரான ரூத் போராட் அனுப்பிய இமெயிலில் இதுநாள் வரையில் ஊழியர்களுக்கு கொடுத்து வந்த பிட்னஸ் கிளாஸ், ஸ்டேப்லர், டேப், அடிக்கடி மாற்றி அளிக்கப்படும் லேப்டாப் ஆகிய சேவைகள் நிறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
க்ரோம்புக்
இன்ஜினியரிங் அல்லாத ஊழியர்களுக்கு இனி ஆப்பிள் மேக்புக் அளிக்கப்பட மாட்டாது, இதற்கு மாறாக கூகுள் நிறுவனத்தின் க்ரோம்புக் தான் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் டெஸ்டிங் மற்றும் இதர சேவைக்காக ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு அளிக்கப்படும் பட்ஜெட் குறைக்கப்பட உள்ளது, நிறுவனத்தில் இருக்கும் பழைய போன்களை பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது.
கஃபே மூடல்
தற்போது கூகுள் நிறுவனத்தில் வாரத்தில் 3 நாள் மட்டுமே ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகின்றனர். இதில் திங்கட்கிழமை அலுவலகத்தில் இருக்கும் கஃபே-யில் அதிகப்படியான muffin தயாரிக்கப்படுகிறது. ஆனால் அலுவலகத்திற்கு வருவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
யோகா வகுப்பு
இதேபோல் வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு இலவச யோகா வகுப்பு அளிப்படுகிறது, ஆனால் வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு வருவோர் எண்ணக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் கஃபே மற்றும் பிட்னல் வகுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக ரூத் போராட் தான் அனுப்பிய இமெயிலில் தெரிவித்தார்.
நிரந்தர சீட்
சில நாட்களுக்கு முன்பு கூகுள் தனது கிளவுட் பிரிவு ஊழியர்களை அலுவலகத்தில் இருக்கும் டேபிள்-ஐ பிகிர்ந்து பயன்படுத்த உத்தரவிட்டது, இதோடு சில அலுவலகங்களையும் மூடியது. இதற்கு முன்பு 12000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட போது ஸ்பா ஊழியர்களை பணிநிக்கம் செய்து ஸ்பா சேவையை முழுமையாக நிறுத்தியது.
முக்கிய இலக்கு
2023 ஆம் ஆண்டின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்று, அதிகப்படியான செயல்திறன் மற்றும் வேகமான செயல்பாடுகளை குறைந்த செலவில் அளிப்பது தான். மேலும் இந்த அடிப்படையில் தான் அனைத்து பிரிவுகளும், அமைப்புகளும் கூகுள் நிறுவனத்தில் இயங்க வேண்டும் என்ற முக்கிய கட்டுப்பாட்டையும் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆல்பபெட்
கடந்த 20 வருடத்தில் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் அறிவித்துள்ள மிக பெரிய செலவின குறைப்பு நடவடிக்கை இது, ஏற்கனவே மந்தமான வர்த்தக சூழ்நிலை காரணமாக ஆல்பபெட் நிர்வாகம் சுமார் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து மிகப்பெரிய தொகையை சேமித்துள்ளது. இதோடு நிற்காத கூகுள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மகப்பேறு மற்றும் மருத்துவ விடுமுறைக்கு பணம் செலுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது.
ரூத் போராட் 2008 கதை
மேலும் கூகுள் நிறுவனத்தின் பைனான்ஸ் பிரிவின் தலைவரான ரூத் போராட் தனது இமெயிலில் 2008 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தையும் பதிவு செய்தார். 2008ல் நிறுவனத்தின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகமாக இருந்தது. இப்போது தான் அதிகப்படியான இயந்திரங்களை நிறுவினோம், ரியல் எஸ்டேட் முதலீடுகளை குறைத்தோம்.
செலவின குறைப்பு
இதை தாண்டி 2008ல் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த டிராவல் மற்றும் எண்டர்டெயின்மென்ட் பட்ஜெட் குறைக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த பல கஃபே-கள் மூடப்பட்டது. மைக்ரோ கிட்சன், மொபைல் போன் பயன்பாட்டு செலவுகளும் குறைக்கப்பட்டது. இது மட்டுமா ஊழியர்களுக்கு hybrid vehicle subsidiary கொடுக்கப்பட்டது. இப்படி 2008 ஆம் ஆண்டை போலவே அதிக செலவுகளாகும் இடத்தில் செலவின குறைப்பை அறிவிக்க முடிவு செய்துள்ளோம் என ரூத் போராட் தனது இமெயிலில் தெரிவித்தார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications