'மசாஜ்' எல்லாம் இனி கிடையாது.. சுந்தர் பிச்சை எடுத்த முடிவு.. டிவிட்டர் போலக் கூகுள்..!

கூகுள் என்னும் மாபெரும் டெக் சாம்ராஜ்ஜியம் உருவாகி 25 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத வகையில் 12000 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்தது.

இதுமட்டுமா உயர் பதவியில் இருக்கும் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்காமல் மூத்த துணைத் தலைவர் பதவிக்கு (Senior Vice President) மேல் இருக்கும் அனைத்து ஊழியர்களின் போனஸ் தொகையில் பெரிய பாதிப்பு ஏற்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் போது அந்நாட்டில் குடியுரிமை பெறும் வாய்ப்பு உள்ளது, இதற்காக PERM என்னும் திட்டத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதைத் தற்காலிகமாக நிறுத்த உள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது.

உச்சக்கட்டமாகக் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றுவோருக்குக் கிடைக்கும் முக்கியமான சலுகைகளை நிறுத்த உள்ளதாகக் கூகுள் இன்று அறிவித்துள்ளது.

 டிவிட்டர் - எலான் மஸ்க்

டிவிட்டர் - எலான் மஸ்க்

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பின்பு தேவையில்லாத மற்றும் தனது கொள்கைக்கும்,திட்டத்திற்கும் எதிராக இருக்கும் அனைத்து உயர் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்த பின்பு, டிவிட்டர் நிறுவன ஊழியர்களுக்குத் தேவைக்கு அதிகமாக அளிக்கப்படும் சலுகைகள் அனைத்தையும் கட் செய்தார்.

கார்பரேட் தலைவர்கள்

கார்பரேட் தலைவர்கள்

இதில் உணவும், சுற்றுலா எனப் பல சேவைகள் அடக்கம். எலான் மஸ்க் நடவடிக்கையைக் கார்பரேட் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனமும் செலவுகளைக் குறைக்கும் விதமாகத் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளை ரத்துச் செய்து வருகிறது.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பின்பு, பணியில் இருக்கும் ஊழியர்களுக்குச் சம்பளம் குறைப்பு, PERM திட்டம் என அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது அலுவலகத்தில் அளிக்கப்படும் மசாஜ் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

 27 மசாஜ் தெரபிஸ்ட் பணிநீக்கம்

27 மசாஜ் தெரபிஸ்ட் பணிநீக்கம்

கலிபோர்னியா அலுவலகத்தில் இருக்கும் கூகுள் ஊழியர்களுக்கு இது நாள் வரையில் 27 மசாஜ் தெரபிஸ்டுகளை அலுவலகத்திற்குள்ளேயே வைத்துக் கொண்டு மசாஜ் சேவை அளிக்கப்பட்டு வந்தது. 12000 ஊழியர்கள் 27 மசாஜ் செய்யும் ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

கலிபோர்னியா அலுவலக

கலிபோர்னியா அலுவலக

கூகுள் நிறுவனத்தின் கலிபோர்னியா அலுவலகத்தில் மட்டும் சுமார் 1,845 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இதில் 24 மசாஜ் சிகிச்சையானார்களும் அடக்கம். இந்த 24 பேரும் மவுண்டன் வியூ அலுவலகத்திலும், மூன்று பேர் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இர்வைன் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

கூகுள் ஊழியர்கள்

கூகுள் ஊழியர்கள்

கூகுள் தனது ஊழியர்களை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் என அனைவருக்கும் தெரியும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை, குழந்தை பெற்ற தந்தைக்கு விடுமுறை முதல் பல நாட்டு ருசியில் இலவச உணவு, 24 மணிநேரமும் ஸ்னாக்ஸ், ஸ்டார்பக்ஸ் காஃபி வரை கூகுள் தனது ஊழியர்களுக்கான நம்பமுடியாத சலுகைகள் வழங்குவது வழக்கம்.

இலவச மசாஜ் புள்ளி

இலவச மசாஜ் புள்ளி


இந்த நிலையில் கூகுள் ஊழியர்கள் தங்களது பணி திறனுக்கு ஏற்ப இலவச மசாஜ் புள்ளிகளைப் பெற்று வந்தனர், இது ஊழியர்கள் மத்தியில் முக்கிய ஊக்குவிக்கும் திட்டமாக இருந்தது. இந்த நிலையில் கூகுள் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளைப் படிப்படியாகக் கட்டுப்படுத்திப் பணத்தை மிச்சப்படுத்தி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+