கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர் யார் குறைவான நேரம் பணியாற்றுகிறார்கள் என்ற சண்டையில் ஒரு நாளுக்கு 2 மணிநேரம் மட்டுமே பணியாற்றிவிட்டு 5,00,000 டாலர் அதாவது ரூபாய் மதிப்பில் 4.10 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள் என்ற செய்தி கார்ப்பரேட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு மத்தியில் எலான் மஸ்க்-ன் "வாவ்" கமெண்ட் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் உயர்மட்ட நிர்வாகத்தை எரிச்சல் அடைய செய்துள்ளது.
இந்த நிலையில் கூகுள் ஒவ்வொரு பதவிக்கும் எந்த அளவு சம்பளம் அளிக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் கூகுள் நிறுவனம் அதிகப்படியான பணிநீக்கம் மற்றும் செலவுகள் குறைப்பு திட்டத்தை கையில் எடுத்துள்ள காரணத்தால் இந்த வருடத்தில் புதிதாக சேர்ந்த ஊழியர்கள், சேரப்போகும் ஊழியர்கள் குறைவான சம்பளம் பெற்று இருக்க கூடும். இதனால் 2022 சம்பள அளவுகளை கணக்கில் எடுப்பது தான் சரியாக இருக்கும்.

இதற்கு ஏற்றார் போல் கூகுள் நிறுவனத்தின் சம்பளம் குறித்த உள் நிர்வாக அறிக்கையை பிஸ்னஸ் இன்சைடர் பத்திரிக்கை ரகசியமாக கைப்பற்றியுள்ளது. இந்த அறிக்கையின் படி 2022 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அதிகம் சம்பாதித்த பிரிவாக உள்ளனர், இப்பதவியில் இருப்போர் சுமார் 5.9 கோடி ரூபாயை அடிப்படையாக சம்பளமாக பெற்றுள்ளனர்.
இவர்களை தொடர்ந்து இன்ஜினியரிங் மேனேஜர்கள் வருடத்திற்கு 3.28 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளனர். இதேபோல் கூகுள் நிறுவனத்தின் எண்டர்பிரைஸ் டைரெக்ட் சேல்ஸ் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் 3.09 கோடி ரூபாயும், கார்பரேட் சட்ட பிரிவில் இருக்கும் ஊழியர்கள் 2.62 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகின்றனர். இதோடு ப்ரோகிராம் மேனேஜர்கள் 2.46 கோடி ரூபாயை 2022 ஆம் ஆண்டில் அடிப்படை சம்பளமாக பெற்றுள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் சம்பளம் குறித்த உள் நிர்வாக அறிக்கையில் சுமார் 12000 ஊழியர்களின் தரவுகள் இருந்தாலும், இதில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு சம்பள அளவுகள் திரட்டப்பட்டு உள்ளது. இதை விட முக்கியமாக கூகுள் நிறுவன ஊழியர்களின் மீடியன் சம்பளம் அதாவது சராசரி சம்பளம் 2.3 கோடி ரூபாயாகும்.
ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள், தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை தாண்டி போனஸ், பங்குகள் ஆகியவற்றையும் அளிக்கிறது. இதுமட்டுமல்லாமல் கூகுள் அலுவலகத்தில் 3 வேளையும் இலவச உணவில் துவங்கி துணிதுவைக்கும் சேவை வரையில் உள்ளது. திங்கட்கிழமை காலை அலுவலகம் சென்றால் வெள்ளிகிழமை மாலையில் வீட்டுக்கு வந்தால் போதும், அந்த அளவுக்கு சகல வசதிகளும் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications