உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமாக இருக்கும் கூகுள் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்த்த காரணத்தாலும், எதிர்வரும் ரெசிஷனை சமாளிக்கச் செலவுகளைக் குறைத்தாக வேண்டிய காரணத்தால் சுந்தர் பிச்சை தலைமையிலான ஆல்பபெட் நிர்வாகம் பல மாத தாமதம், எச்சரிக்கைக்குப் பின்பு 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் 25 வருடத்தில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான பணிநீக்கத்தை அறிவித்துள்ளது, இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் கண்ணீர் கதைகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது.
இதைக் கேட்கும்போதே மனதை நெருடுகிறது என்றால் மிகையில்லை.
கூகுள் பணிநீக்கம்
கூகுளில் பணிநீக்கம் செய்யப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது 4-8 மாத சம்பளத்தை severance pay ஆக அளிக்க உள்ளதாக அறிவித்திருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுகிறார் என்பது மிகவும் முக்கியம்.
இண்டர்வியூவ் போன் கால்
கூகுள் நிறுவனத்தின் முன்னாள் recruiter ஆகப் பணியாற்றிய Dan Lanigan-Ryan கூகுள் நிறுவனத்தில் முக்கியமான பணியிடத்திற்காக ஒருவரை இண்டர்வியூவ் செய்து வந்த நிலையில் திடீரெனப் போன்கால், ஈமெயில் என அனைத்தும் கட் செய்யப்பட்டது. அவருக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சனையா என்று விசாரித்த போது அவரது அணியில் பலருக்கும் இதேபோன்ற பிரச்சனை இருந்துள்ளது.
பணிநீக்கம்
அடுத்த 10-15 நிமிடத்தில் கூகுள் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகவும், அதில் Dan Lanigan-Ryan-ம் பாதிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் ஒருவரை சேர்ப்பதற்காக இண்டர்வியூவ் எடுத்துக்கொண்டு இருந்த போது அவருடைய பணி இல்லை என்பது எவ்வளவு மோசமான விஷயமாக இருக்கும்..?!!!
கை குழந்தை
பொதுவாகக் கூகுள் நிறுவனத்தில் கணவன்,மனைவி இணைந்து பணியாற்றுவோர் எண்ணிக்கை அதிகம், அப்படிப் பள்ளியில் இருந்து காதலித்துத் திருமணம் செய்துகொண்டு 4 மாத கை குழந்தை உடன் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் Allie மற்றும் Steve ஆகியோர் இந்த 12000 ஊழியர்கள் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விடுமுறை
குழந்தை பெற்றதால் மார்கெட்டிங்க் மேனேஜர் ஆக இருக்கும் Allie 8 மாத மகப்பேறு விடுமுறையிலும், ரிசர்ச் ஆப்ரேஷன்ஸ் மேனேஜர் ஆக இருக்கும் Steve 2 மாத paternity leaveல் உள்ளார். மார்ச் மாதத்தில் கூடுதலாக 2 மாதம் குழந்தையைப் பார்த்துக்கொள்ள விடுமுறை எடுத்த Steve திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இனி குழந்தையைப் பார்த்துக்கொள்வதும் கடினம், புதிய வேலையைத் தேடுவதும் கடினம்.
தாய் மரணம்
பொதுவாகக் காப்பரேட் கலாச்சாரத்தில் சென்டிமென்ட்-க்கு இடமில்லை என்று கூறப்படுவதை நிரூபணம் செய்யும் வகையில், Tommy York டிசம்பர் மாதம் தனது தாய் இறந்துவிட்ட நிலையில் விடுமுறையில் இருந்து பணிக்கு சேர்ந்த சில நாளில் கூகுள் நிர்வாகம் ஊழியரின் மன நிலையிலையைப் புரிந்துகொள்ளாமல் பணிநீக்கம் செய்துள்ளது என லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
Tommy York பதிவு
Tommy York டிசம்பர் 2021ல் தான் கூகுள் நிறுவன பணியில் சேர்ந்தார், இந்தப் பணிநீக்கம் கன்னத்தில் அறைந்தது போல இருந்தது எனப் பதிவிட்ட அவர், எந்த அடிப்படையில் கூகுள் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.
பிரசவ அறை
கூகுள் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த Kate Howells லின்கிடுஇன் தளத்தில் தனது வாழ்நாளிலேயே மிகவும் சிறப்பான நாளாக இருக்க வேண்டியது, மிகவும் சோகமான நாளாக மாறியுள்ளது எனப் பதிவிட்டு உள்ளார்.
கூகுள் வாழ்க்கை முடிந்தது
ஜனவரி 19 ஆம் தேதி இரவு 8.59 மணிக்கு என்னுடைய 2வது குழந்தையான Ronin Mark Watson-ஐ பெற்றேடுத்தேன், 20ஆம் தேதி காலை 7.05 மணிக்குக் கையில் குழந்தை உடன் இருக்கும் போது கூகுள் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தி வந்தது. 9.5 வருட கூகுள் வாழ்க்கை இன்றோடு முடிந்தது எனக் கை குழந்தை உடன் பதிவிட்டு உள்ளார் Kate Howells.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications