உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமாக இருக்கும் கூகுள், கடந்த 25 வருட வரலாற்றில் எப்போதும் செய்திடாத வகையில் 10000 மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் டெக் ஊழியர்களுக்கு அலுவலகத்தில் அளிக்கப்படும் பல்வேறு சேவைகளை ரத்து செய்தது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில் தற்போது கூகுள் ஊழியர்கள் இருவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை-க்கே அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதோடு நிற்காமல் எலான் மஸ்க் கூடுதலாக சீண்டியதில் தற்போது சுந்தர் பிச்சை உச்சக்கட்ட கடுப்பில் உள்ளார்.

மாத சம்பளக்காரர்கள் பொதுவாக ஒரு நாளுக்கு 8-9 மணிநேரம் பணியாற்றுவார்கள், சிலர் 10- 12 மணிநேரம் கூட பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட ஊழியர்களுக்கு இந்த செய்தி கூடுதல் மனவருத்தத்தைக் கொடுக்க அதிகப்படியான வாய்ப்புகள் உண்டு. டிவிட்டரில் nearcyan என்ற கணக்கில் செய்யப்பட்ட பதிவு தற்போது கூகுள் ஊழியர்கள் மத்தியிலும் டெக் ஊழியர்கள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
nearcyan தனது பதிவில் இரண்டு கூகுள் ஊழியருடன் டின்னர் சாப்பிட்டேன், இருவரும் குறைவான நேரம் பணியாற்றுவது குறித்து பெருமை பேசி வந்ததைத் தாண்டி போட்டியும் உருவானது. கடைசியில் ஒரு நாளுக்கு 2 மணிநேரம் மட்டுமே பணியாற்றுபவர் வெற்றிபெற்றார். இவருக்கு சம்பளம் 500K USD எனப் பதிவை முடித்தார்.
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஒரு நாளுக்கு 2 மணிநேரம் மட்டுமே பணியாற்றிவிட்டு 5,00,000 டாலர் சம்பளம் வாங்குகிறார். அப்படியானால் இன்றைய டாலர் ரூபாய் மதிப்புக்கு 4.10 கோடி ரூபாய்.
இந்த டிவிட்டர் பதிவு பெரிய அளவில் டிரெண்டான நிலையில் எலான் மஸ்க் கண்களிலும் பட்டது, சும்மா விடுவாரா Wow என ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க உலகம் முழுவதும் டிரெண்டானது இந்த பதிவு. அதைத் தொடர்ந்து எலான் மஸ்க் ரிப்ளை ஆகியவை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை-யை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது.
இந்த காரணத்திற்காக தான் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்பு சுமார் 80 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். இதுகுறித்து ஒரு இண்டர்வியூவ்-ல் கேள்வி கேட்டபோது எலான் மஸ்க் உண்மையில் இவ்வளவு அதிகமான ஊழியர்கள் எங்களுக்கு தேவையில்லை. தற்போது இருக்கும் ஊழியர்களை வைத்தே அனைத்து பணிகளையும் செய்ய போதுமானதாக உள்ளது என தெரிவித்தார்.
ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த டிவிட்டர் பதிவு ஒரு உதாரணமாக உள்ளது. 4 கோடி சம்பளம் வாங்கிட்டு ஒரு நாளுக்கு 2 மணிநேரம் பணியாற்றுவதை நீங்கள் எப்படி பார்க்குறீங்க..? மறக்கமாக கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications