சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட GOOGLE.. இது தேவையா? Sundar Pichai கொடுத்த நச் பதில்..!

உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள் தனது 25 ஆண்டு வரலாற்றில் எந்த காலத்திலும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது இல்லை, ஆனால் 2023 ஆண்டு துவக்கத்தில் சுமார் 12000 ஊழியர்களை மொத்தமாக பணிநீக்கம் செய்தது. இதோடு நிற்காமல் செயற்கை நுண்ணறிவு எழுச்சியை தொடர்ந்து கூகுள் ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

இப்படி கூகுள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் பணியை ராஜினாமா செய்தவர்கள் சுமார் 2000 புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்கள். இது மட்டும் அல்லாமல் பலர் OpenAI போன்ற கூகுள்-க்கு நேருக்கு நேர் மோதும் நிறுவன பணியில் சேர்ந்துள்ளனர்.

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட GOOGLE.. இது தேவையா? Sundar Pichai கொடுத்த நச் பதில்..!

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிர்வாகம் எடுத்த பணிநீக்க முடிவின் வாயிலாக இது நடந்துள்ளதால் சொந்த காசில் சூனியம் வைத்ததுள்ளது என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதேவேளையில் சுந்தர் பிச்சை ப்ளூம்பெர்க் உடனான ஒரு இண்டர்வியூவில் இதுக்குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது சுந்தர் பிச்சை நச் பதில் கொடுத்துள்ளார்.

கூகுள்-ஐ விட்டு வெளியேறியவர்கள் 2000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியுள்ளார்களே இதை எப்படி பார்க்கிறார்கள் என சுந்தர் பிச்சையிடம் கேட்ட போது, இதற்கு சுந்தர் பிச்சை கூகுள் முன்னாள் ஊழியர்கள் உருவாக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது கூகுள் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர்.

இன்னும் சிலர் திரும்ப கூகுள் நிறுவனத்தில் வேறு புதிய பணியில் சேர்ந்துள்ளனர் இதன் மூலம் tech ecosystem-ன் வலிமையாகியுள்ளது என கூறினார். இது சுந்தர் பிச்சையின் வெளிப்படையான மனதை காட்டுகிறது, மேலும் 2000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏதேனும் புதிய ஆப் அல்லது இணைய தளத்தை உருவாக்கினால் அதன் வாயிலாகவும் கூகுள் விளம்பரம் உட்பட பல வகையில் சம்பாதிக்க முடியும்.

மேலும் சுந்தர் பிச்சை இந்த இண்டர்வியூவில் GOOGLE BARD குறித்தும் பேசினார். செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் சிறப்பாக செயல்படும் இடமும் உள்ளது, இதேபோல் வளர்ச்சி அடைய வேண்டிய இடமும் உள்ளது என தெரிவித்துள்ளார். chatbot technology-யில் கூகுள் மிகவும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+