மறைமுகமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்..!! அது என்ன Buyout திட்டம்? டெக் ஊழியர்களே கவனம்..!!

அமெரிக்க டெக் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை அதிகமான பணத்தை ஏஐ-க்காக செலவிட்டு தற்போது செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இதன் காரணமாக ஊழியர்கள் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கின்றன. நேரடியாக பணிநீக்கம் செய்யாமல் நீங்களே வேலையை விட்டு செல்லுங்கள் என அறிவிக்கின்றன.

அண்மையில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் 60,000 ஊழியர்களை நீங்கள் தானாக வேலையை விட்டு செல்லலாம் என Voluntary Exit திட்டத்தை கொண்டு வந்தது. இந்நிலையில் கூகுளும் அதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏஐ துறையில் செய்யப்படும் முதலீடுகள் தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில், நிறுவனத்தின் செயல்பாட்டு செலவுகளை கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் விருப்ப ஓய்வு எனப்படும் Buyout திட்டங்களை மேலும் சில நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

மறைமுகமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்..!! அது என்ன Buyout திட்டம்? டெக் ஊழியர்களே கவனம்..!!

கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த விருப்ப ஓய்வு திட்டம், தற்போது மேலும் ஐந்து நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கனடா , பிரான்ஸ், ஜெர்மனி , ஜப்பான் , சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த கூகுள் ஊழியர்கள் தாங்களாகவே முன் வந்து வேலையை விட்டு செல்லலாம்.

கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,04,757 ஆக இருந்தது. தற்போது ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளுக்கே கூகுள் முன்னுரிமை தருகிறது. எனவே, இந்த பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த விருப்ப ஓய்வு திட்டம் இல்லை.

Also Read

அதாவது கூகுள் கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவான DeepMind ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்திலிருந்து முற்றிலுமாக விலக்கு பெற்றுள்ளனர். மற்ற துறைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் இதில் விண்ணப்பம் செய்து வேலையை விட்டு செல்லலாம்.

இவ்வாறு வேலையை விட்டு செல்லும் ஊழியர்களுக்கு கூகுள் என்ன இழப்பீடுகளை வழங்குகிறது என்ற விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. சுவிட்சர்லாந்து நாட்டு ஊழியர்களுக்கான இழப்பீட்டு விவரங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இதன்படி விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்றுக்கொண்டு வெளியேறும் ஊழியர்களுக்கு, அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மாத ஊதியம் வீதம் கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த தொகை அதிகபட்சமாக 12 மாத ஊதியம் வரை மட்டுமே என வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

ஒரு வாரத்திற்கு முன்பு தான் மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 60,000 ஊழியர்களுக்கு இதே போன்ற விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. ஏஐ தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பு செலவுகள் மற்றும் தரவு மையங்களின் பராமரிப்பு செலவுகள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருவதால், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை ஏஐ பக்கம் முழுமையாக திருப்பிவிட்டுள்ளன. இதனால் நிறுவன செலவுகளை சிக்கனப்படுத்த ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கின்றன. நேரடியாக பணிநீக்கம் என கூறி ஊழியர்களை குறைக்காமல் அவர்களாகவே வேலையை விட்டு செல்லும் வகையிலான திட்டங்களை அறிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+