சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் 'ஜெமினி' என்ற புதிய செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே கூகுள் அறிமுகம் செய்துள்ள ஏஐ மாடல்களை காட்டிலும் கூகுளின் சமீபத்திய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாடலாகும்.
டிசம்பர் 7, 2023 அன்று கூகுள் நிறுவனம் ஜெமினியை அறிமுகம் செய்தது. இது தொடர் மேம்பாட்டு கட்டத்தில் இருந்தாலும் OpenAI நிறுவனத்தின் ChatGPT-ஐ காட்டிலும் பல இடத்தில் சிறப்பாக செயல்படுகிறது.

இதில் முக்கியமாக கூகுள் ஜெமினி பல வழிகளில் அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வல்லமை கொண்டது, உதாரணமாக சாட்ஜிபிடி டெக்ஸ்ட் மற்றும் புகைப்பட வாயிலாக மட்டுமே இயங்கும் வல்லமை கொண்டது. ஆனால் கூகுள் ஜெமினி text, audio, images, video ஆகியவற்றை கேள்வியாக ஏற்றுக்கொண்டு பதில் அளிக்கும் வல்லமை கொண்டது.
இதேபோல் கூகுள் நிறுவனம், OpenAI நிறுவனத்தின் ChatGPT-ஐ காட்டிலும் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என திட்டமிட்டு 3 முக்கிய சேவைகளை வழங்கி வருகிறது.
ஜெமினி அல்ட்ரா: மிகவும் சிக்கலான பணிகளுக்கு மிகப்பெரிய மற்றும் மிகவும் திறன் வாய்ந்த தளமாக இருக்கும். இது பெரிய பெரிய டேட்டா-வை ஆய்வு செய்யும் நிறுவனங்களில் பயன்படுத்த கூடியவை.
ஜெமினி ப்ரோ: இது பரந்த அளவிலான பணிகளுக்கு பயன்படுத்த கூடியவை. அதாவது அனைத்து தரப்பு மக்களும், நிறுவனங்களும் பயன்படுத்த கூடியது.
ஜெமினி நானோ: ஜெமினியில் இயங்கும் மொபைல் ஆப்-களை உருவாக்க விரும்பும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.
மேலும் கூகுள் நிறுவனம் சந்தையின் செயற்கை நுண்ணறிவை அளவிடும் பென்ச்மார்க் அளவுகளில் ஜெமினி ப்ரோ சேவை GPT-3.5 சேவை 8-ல் 6 பிரிவுகளில் வென்றுள்ளது. இதேபோல் ஜெமினி அல்ட்ரா சேவையை GPT-4 உடன் ஒப்பிடுகையில் 8 பென்ச்மார்க்-ல் 7 பிரிவுகளில் வென்றுள்ளது என கூகுள் AI பிரிவின் துணை தலைவரான Sissie Hsiao தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சாட்ஜிபிடி-க்கு போட்டியாகவும், பல இடத்தில் சாட்ஜிபிடி-ஐ காட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் கூகுள் இந்த ஜெமினி மூலம் உயர்ந்துள்ளது. இதேபோல் ஜெமினி நானோ சேவை மூலம் அனைத்து ஆண்ட்ராய்டு ஆப்-களும் இனி ஏஐ சக்தி பெற வழி வகுத்துள்ளது கூகுள்.
மேலும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் Google Bard சேவையை ஜெமினி ப்ரோ தளத்துடன் இணைக்கப்பட்டு அப்டேட் செய்யப்பட உள்ளது. ஆங்கில மொழியில் மட்டுமே இயங்கும் Google Bard சுமார் 170 நாடுகளில் இயங்கி வருகிறது, இதன் மூலம் இனி 170 நாட்டு மக்களும் ஜெமினி ப்ரோ தளத்தை பயன்படுத்த துவங்குவார்கள்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கூகுள் உருவாக்கியுள்ள இந்த ஏஐ மாடல் அனைத்தும் அதனுடைய சொந்த TPU எனப்படும் tensor processing units மூலம் இயங்கி வருகிறது. விரைவில் ஜெமினி சேவையை TPU மற்றும் கிராபிக்ஸ் பிராசசர் ஆகியவற்றிலும் பயன்படுத்த உள்ளதாக கூகுள் கிளவுட் ஏஐ பிரிவு தலைவர் Amin Vahdat தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications