கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மிகப்பெரிய கிரிக்கெட் பிரியர் என்பது எல்லோருக்கும் தெரியும். கிரிக்கெட் போட்டியை விடிய விடிய பார்ப்பது மட்டும் அல்லாமல் லண்டன் ஸ்பிரிட் என்ற அணியின் உரிமையை முதலீடு செய்து முக்கியமான ஓனராக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சாட்ஜிபிடி (ChatGPT) பெண்கள் பிரீமியர் லீக் (WPL) உடன் ரூ.16 கோடி மதிப்பிலான இரண்டாண்டு விளம்பர ஒப்பந்தம் செய்தது. இது டெக் துறை நிறுவனங்களுக்கு மிகவும் புதிய மட்டும் அல்லாமல் குறைந்த காலக்கட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெரும் இடமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் ஓப்பன்ஏஐ நிறுவனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டியில் முக்கிய ஸ்பான்சராக கூகுள் ஜெமினியை சுந்தர் பிச்சை களத்தில் இறக்கிவிட்டு உள்ளார். உலகளவில் ஏஐ போட்டியில் கூகுள் முன்னணியில் இருக்கும் வேளையில் ஸ்பான்சர் ஷிப் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.
இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூகுள் நிறுவனத்தின் AI தளமான ஜெமினி மூன்று ஆண்டுகளுக்கு ரூ.270 கோடி மதிப்பிலான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஐபிஎல் வரலாற்றில் AI தளங்களுடன் செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தம் கிரிக்கெட்டில் AI நிறுவனங்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. இந்திய விளம்பர சந்தையில் கேமிங் நிறுவனங்கள் இல்லாத குறையை இத்தகைய டெக் நிறுவனங்கள் குறைத்து வருகிறது.
கடந்த ஆண்டு போட்டோ டிசைன் தளமான கான்வா BCCI ஷர்ட் ஸ்பான்சர்ஷிப்பிற்கு ரூ.554 கோடி ஏலத்தில் போட்டியிட்டது. ஆனால் அப்பல்லோ டயர்ஸ் ரூ.579 கோடிக்கு 2025-2028 சுழற்சிக்கு உரிமையை பெற்றது. இதன் மூலம் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் டெக் நிறுவனங்கள் விளம்பர ஸ்லாட் பெறுவதில் பெரிய அளவில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறை வட்டாரங்கள் கூறுகையில், கூகுள், சாட்ஜிபிடி தாண்டி AI தளங்கள் கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப்பில் ரூ.300 கோடிக்கு மேல் செலவிடும் என்று கணித்துள்ளது. இந்த 300 கோடி ரூபாய் தொகை டிவி மற்றும் டிஜிட்டல் விளம்பர ஸ்பாட் வாங்குவதை தவிர்த்து கணக்கிடப்பட்ட தொகையாகும்.
இத்தகைய டெக் நிறுவனங்கள் உடனான ஒப்பந்தம் ஐபிஎல்-ன் பிராண்ட் மதிப்பை மேலும் உயர்த்தும். AI தொழில்நுட்பம் கிரிக்கெட் ரசிகர்களுடன் இணைவதற்கான புதிய வழிகளை உருவாக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications