உலகில் gmail கணக்கு இல்லாதவர்களின் இல்லை என கூறலாம் அந்த அளவிற்கு நம்முடைய சமூக வலைதள கணக்குகள் தொடங்கி நம்முடைய அலுவலக கணக்குகள் வரை நம் டிஜிட்டல் முகவரியாக ஜிமெயில் இருக்கிறது.
ஒரு நபர் இரண்டு ஜிமெயில் கணக்குகளை அல்லது அதற்கு மேல் ஜிமெயில் கணக்குகளை வைத்து பயன்படுத்தி வருகிறோம். நீண்ட காலமாக ஜிமெயில் கணக்கு பயன்படுத்தக்கூடிய அவர்கள் கூகுள் நிறுவனம் ஜிமெயில் கணக்கில் தங்களுடைய ஐடியை மாற்றுவதற்கான வாய்ப்பை தர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். அந்த கோரிக்கையை கூகுள் நிறுவனம் நிறைவேற்றி இருக்கிறது.

இனி ஜிமெயில் பயனர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு முன்பு இந்த வசதி கிடையாது தற்போது இந்த வசதியை கூகுள் நிறுவனம் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது . எனவே @gmail.com என்பதற்கு முன்னால் இருக்கக்கூடிய உங்களுடைய பெயரை அல்லது யூசர் நேமை நீங்கள் இனி எளிதாக மாற்றிக் கொள்ள முடியும் .
பெரும்பாலான நபர்களின் டிஜிட்டல் முகவரியாக gmail முகவரிதான் இருக்கிறது. சிறுவயதில் சரிவர பெயர்களை தேர்வு செய்யாமல் விளையாட்டாக குறிப்பிட்ட சில பெயர்களை சிலர் gmail ஐடியை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஆனால் அடுத்த கட்டமாக ஒரு வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு செல்லும்போதுதான் அது ப்ரொபஷனலாக இல்லை என்பது தோன்றும் . இந்த சமயத்தில் பெயரை மாற்றலாம் என நினைத்தால் மாற்றமுடிவது கிடையாது.
எனவே கூகுள் நிறுவனம் தங்களுடைய ஜி மெயில் ஐடியை மாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என பயனாளர்கள் நீண்ட காலமாக கேட்டிருந்தனர். அந்த வசதியை ஜிமெயில் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்திருக்கிறது . மின்னஞ்சல் முகவரியில் உங்களுடைய ஐடியை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் . இதனால் உங்களுடைய போட்டோ , காண்டாக்ட் எண்கள் மற்றும் பல தகவல்கள் அழியாது. அதாவது உங்களுடைய பழைய கணக்கில் இருக்கக்கூடிய அனைத்து தரவுகளும் அப்படியே இருக்கும். பெயரை மட்டும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம் எனவே பொதுமக்கள் எந்த அச்சமும் இல்லாமல் பழைய ஐடியை நீக்கிவிட்டு புதிய ஐடிக்கு மாறிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .
google டிரைவில் உள்ள ஃபைல்கள் உள்ளிட்ட அனைத்துமே பத்திரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை பழைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒருவர் மெயில் அனுப்பினால் அது இந்த புதிய மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேருமா என்ற குழப்பம் ஏற்படும் . ஆனால் உங்களுடைய பழைய ஈமெயில் முகவரிக்கு மெயில் அனுப்பினாலும் அது நேரடியாக உங்களின் புதிய முகவரிக்கு வந்து சேர்ந்து விடும் என கூகுள் தரப்பில் உறுதி தரப்பட்டிருக்கிறது .
எனவே பெயரை மாற்றுவதால் உங்களுடைய காண்டாக்டுகள் மின்னஞ்சல் தொடர்புகளையும் நீங்கள் இழந்து விட மாட்டீர்கள் என கூறி இருக்கிறது. மேலும் பயனாளர்கள் தங்களுடைய பழைய மெயில் ஐடி மற்றும் புதிய மெயில் ஐடி என இரண்டுமே உள்ளீடு செய்து லாகின் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டிருக்கிறது. ஒரு பயனர் தனது வாழ்நாளில் மொத்தம் மூன்று முறை மட்டுமே மின்னஞ்சல் முகவரி மாற்றுவதற்கு அனுமதி தரப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விரைவில் இது அனைத்து பயனாளர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் கூறியிருக்கிறது. தற்போதைக்கு இந்தியாவில் கூகுள் சப்போர்ட் பக்கத்தில் இந்தி பிரிவில் மட்டுமே இந்த மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது .


Click it and Unblock the Notifications