பெங்களூரு: கூகுள் நிறுவனம் தற்போது உற்பத்தித் துறையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் அதன் இடத்தை மேலும் விரிவுபடுத்தி வருகிறது. அதேபோல கூகுள் நிறுவனம் தமிழகத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கவும், ட்ரோன் தயாரிப்பைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.
அண்மையில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூகுள் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து ட்ரோன்கள் மற்றும் பிக்சல் செல்போன்களைத் தயாரிக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த முக்கிய அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது போன் தயாரிப்பு சந்தை கடும் போட்டியுடன் உள்ளது. ஒவ்வொரு முன்னணி பிராண்டுகளும் புது புது மாடல்களைத் தயாரிக்கின்றனர். கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எக்கனாமிக் டைம்ஸ் தரவுகளின் படி, பெங்களூருவின் வைட்ஃபீல்டில் உள்ள அலம்பிக் சிட்டியில் உள்ள சுமார் 649,000 சதுர அடி அலுவலக இடத்தை கூகுள் குத்தகைக்கு எடுத்துள்ளது. அப்படி பார்த்தல் ஒரு சதுர அடிக்கு ரூ. 62 மாத வாடகை வீதத்தில் மூன்று வருட லாக்-இன் காலத்துடன் அலுவலகம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது. மொத்தமாக இந்த மூன்று வருடத்திற்கும் சேர்த்து ரூ.4,02,38,000 ரூபாயை கூகுள் செலுத்த வேண்டி இருக்கும். இது உற்பத்தித்துறையின் விரிவாக்கத்திற்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் கூகுள் நிறுவனம் தனது அமெரிக்க அலுவலகங்களில் உள்ள சில முக்கிய ஊழியர்களை பணிநீக்கம் செய்ததை அடுத்து, புதிய அலுவலக இடத்தை பெங்களுருவில் கையகப்படுத்தியுள்ளது.
எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, கூகுள் கனெக்ட் சர்வீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஹைதராபாத்தில் 600,000 சதுர அடி அலுவலக இடத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தது. அதன் பிறகு 2022ஆம் ஆண்டு குத்தகையை புதுப்பித்தது. மேலும் பெங்களூருவில் உள்ள பாக்மனே டெவலப்பர்களிடமிருந்து 1.3 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுக்க கூகுள் ஒப்புக்கொண்டது. 2020ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் கூகுளின் ஆபீஸ் ஸ்பேஸ் 3.5 மில்லியன் சதுர அடியாக விரிவடைந்துள்ளது. தற்போது கூகுள் நிறுவனம், இந்தியா முழுவதும் 5 நகரங்களில் இயங்கி வருகிறது. மொத்தமாக இந்தியாவில் இயங்கி வரும் கூகுள் நிறுவனங்கள் சுமார் 9.3 மில்லியன் சதுர அடி நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications