அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் தங்களுடைய மேப் செயலியில் Gulf of Mexico என்ற பெயரை Gulf of America என பெயர் மாற்றம் செய்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவி ஏற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ வளைகுடா பகுதி இனி அமெரிக்க வளைகுடா என அழைக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனம் தங்களுடைய மேப்ஸ் சேவையில் இப்பெயர் மாற்றம் செய்துள்ளது. அமெரிக்காவில் கூகுள் மேப் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இந்தப் பெயர் காண்பிக்கப்படும் என கூறியுள்ளது.

அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு பகுதியை எப்படி அழைக்கிறதோ அப்படி தான் அதன் பெயரை மேப்பில் காட்ட வேண்டும் என்ற கடமைக்கு இணங்கி இவ்வாறு பெயர் மாற்றம் செய்திருப்பதாக கூகுள் நிறுவனம் தன்னுடைய பிளாக் போஸ்டில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் பயனாளர்கள் மட்டும் இந்த பகுதியை அமெரிக்க வளைகுடா என காண முடியும் என்றும் அமெரிக்காவிற்கு வெளியில் இருக்கும் பயனாளர்கள் இந்த குறிப்பிட்ட பகுதியை வளைகுடா மெக்சிகோ மற்றும் வளைகுடா அமெரிக்கா என இரண்டு பெயர்களையும் காண முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து கூகுள் மேப் செயலியில் ஆய்வு செய்தபோது அதில் மெக்சிகோ வளைகுடா என்றும் பிராக்கெட்டில் அமெரிக்கா வளைகுடா என்றும் காட்டுகிறது. பொதுவாக சர்வதேச அளவில் எந்தெந்த பகுதிகளுக்கெல்லாம் இதுபோல பெயர் அடிப்படையில் சர்ச்சைகள் இருக்கின்றனவோ அப்பொழுது அனைத்து பெயர்களையும் மேப் செயலில் காட்டுவதே எங்களுடைய பழக்கம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் அதிபரானது முதலே பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்தபோது அலாஸ்கா பகுதியை சேர்ந்த பாரம்பரிய மக்கள் அங்கு இருக்கும் மலைக்கு டனாலி என பெயர் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அந்த மலையின் பெயரை மாற்றினார். தற்போது டொனால்ட் டிரம்ப் அந்த உத்தரவை நீக்கி இனி இந்த மலை அதன் பழைய பெயரான மவுண்ட் மிக்கலி என்று அழைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதனிடையே டிரம்பின் நடவடிக்கை மெக்சிகோ உடனான மோதல் போக்கை இன்னும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இவர் மெக்சிகோவுடன் வர்த்தக போரை தொடங்கி இருக்கும் நிலையில் தற்போது இந்த பெயர் மாற்றத்தின் மூலம் ராஜாங்க பூர்வமாகவும் மோதலை தொடங்கியிருக்கிறார். இனி அமெரிக்காவை நாங்கள் மெக்சிகன் அமெரிக்கா என அழைப்போம் என மெக்சிகோ அதிபர் கூறியுள்ளார்.
1848 ஆம் ஆண்டு மெக்சிகோவின் பெரும்பாலான பகுதிகளை அமெரிக்கா கையகப்படுத்துவதற்கு முன்னதாக இந்த பகுதி மெக்சிகன் அமெரிக்கா என்று தான் அழைக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications