நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. முன்பு 100 ரூபாய்க்கு நாம் வாங்கிய பொருட்களை இன்று வாங்கி பார்த்தால் நமக்கே வித்தியாசம் தெரியும். அந்த அளவுக்கு விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. இதை உணர்த்தும் வகையில் ஒரு சம்பவத்தை பெங்களூரைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
ஒரு ஜோடி நல்ல சம்பளம் பெற்றாலும் அவர்களின் விலை உயர்ந்த வாழ்க்கை முறையின் காரணமாக சம்பளம் முழுவதையும் கடனை திருப்பிச் செலுத்த பயன்படுத்துகின்றனர் என்று பெங்களூரைச் சேர்ந்த Testimonial.to என்ற நிறுவனத்தின் நிறுவனரான டேமன் சென் பகிர்ந்துள்ளார்.

இந்த ஜோடி அடமானம் வைத்ததை மீட்கவும், பயன்பாட்டு கட்டணங்களை செலுத்தவும், கல்வி கட்டணம், மளிகை சாமான்கள் ஆகியவற்றிற்காகவும் மாதத்திற்கு $30,000 டாலரை செலவழிக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டபோது தான் ஆச்சரியமடைந்ததாக போஸ்ட் செய்துள்ளார். $30,000 என்பது இந்திய மதிப்புக்கு ரூ.25 லட்சமாகும்.
அதிக சம்பளம் பெறும் இந்த ஜோடி தொழில்நுட்ப வல்லுனர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் டேமன் சென்-னுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள். ஆரம்பத்தில் தங்களுடைய செலவு குறித்து இந்த ஜோடி கூறிய போது டேமன் சென் அவர்களை நம்ப மறுத்துள்ளார். இருப்பினும் அவர்களுடைய செலவுகளின் பட்டியலை பார்த்த பிறகு தனது நண்பர் பொய் சொல்லவில்லை என்பதை நம்பியுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் விரிகுடா பகுதியில் உள்ள ரூ.3 கோடி மதிப்புள்ள வீட்டிற்கான வீட்டுக் கடனாக மாதம் ரூ.14 லட்சம், அவர்களது குழந்தையின் பள்ளிக்கூட கட்டணம் மற்றும் சொத்து வரி ஆகியவற்றிற்கு தலா ரூ. 2.5 லட்சம், மின்சாரக் கட்டணங்கள், வெளியே சாப்பிடுவது, மளிகைப் பொருட்கள், பயணம் மற்றும் இரண்டு கார்களின் பராமரிப்பு ஆகியவற்றைச் சேர்த்து அவர்களின் மாத செலவு தோராயமாகா ரூ.25 லட்சத்தை எட்டுகிறது.

டேமன் சென் தனது ட்விட்டர் பதிவில், "என் நண்பர் என்னிடம் நானும் என் மனைவியும் அதிக சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும் நிறைய செலவாகிறது என்று சொன்னார். தொழில்நுட்பத் துறையில் அதிக வருமானம் பெறுபவர்கள் என்பதால் முதலில் நான் அதை நம்பவில்லை. எனது நண்பர் கூகுளில் வேலை செய்கிறார். ஆனால் அவர்களுடைய செலவை கணக்கிட்ட பிறகு அவர்கள் பொய் சொல்லவில்லை என்பதை நான் கண்டுபிடித்தேன்" என்று டெஸ்டிமோனியல்.டுவின் நிறுவனர் தனது X பதிவில் எழுதியிருந்தார்.
வீட்டு பராமரிப்பு, நெட்ஃப்ளிக்ஸ் கட்டணம் போன்ற பிற செலவுகளைத் தவிர்த்து இந்தத் தம்பதியர் மாதம் $30,000 செலவு செய்ததாக சென் பதிவிட்டிருந்தார். சராசரி அமெரிக்க மக்களை விட அதிகமாக சம்பாதித்தும் கூட இந்த தம்பதியினரிடம் எந்த சேமிப்பும் இல்லை. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். இவருடைய பதிவுக்கு பலரும் தங்களுடைய கமெண்ட்ஸ்-களைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications