டெக் துறையில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வரும் நிலையில், இது செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
சமீபத்தில் கூகுள் இந்தியா நிறுவனம் பல ஊழுயர்களை பணி நீக்கம் செய்தது. இது ஆரம்பத்தில் செலவு குறைப்பின் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. இது ஒரு புறம் எனில் சரியாக பெர்ம்பார்ம் செய்யாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக கூறப்பட்டது.
பெர்பார்மன்ஸ் அடிப்படையில் பணி நீக்கம் இல்லை
ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின் படி, நிறுவனத்தில் நன்றாக பெர்பார்ம் செய்த ஊழியர்களும் உள்ளனர் என கூறப்படுகிறது. இது குறித்து லிங்க்ட் இன் பக்கத்தில் நன்றாக பணிபுரிந்த ஊழியர்களும் இந்த பட்டியலில் அடங்குவர். இவர்கள் ஏற்கனவே ஹை ரேட்டிங்கினை கொண்டவர்கள். ஆக ஊழியர்களின் பெர்பார்மன்ஸ் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அவர்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை.
லிங்க்ட் பக்கத்தில் பதிவு
இந்தியாவில் 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். நல்ல பெர்ம்பார்ம் செய்யக் கூடியவர்கள். அவர்கள் அணிக்கே மதிப்பு சேர்த்தவர்கள். ஆனால் இந்த பணி நீக்க பட்டியலில் அவர்களும் உள்ளனர். ஆக இது செயல்திறன் அடிப்படையிலான பணி நீக்கம் என்பது இல்லை என பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், தனது லிங்க்ட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஊழியரின் கருத்து
தற்போது பணி நீக்கம் செய்யப்படாமல் பணியில் இருக்கும் ஊழியர்கள், பணியில் இருக்கும் ஊழியர்களை விட சிறந்தவர்கள் அல்ல.
சமீபத்தில் ஒரு முன்னாள் கூகுள் ஊழியர் நிறுவனத்தின் நிதிச் சலுகைகளை கோல்டன் ஹேண்ட்கப்ஸ் என்று கூறினார். இது தன்னை வேலையை விட்டு விலகுவதை கடினமாக்கியது. எனினும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுளில் அந்த பெண், ஒரு நாள் காலை இனி நிறுவனத்தின் ஒரு பகுதியாக இல்லை என்ற செய்தியினை கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
12,000 பேரில் ஒருவர்
நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட 12,000 பேரில் ஒருவரான ஜெனிபர் வேடன்பார்த், ஒரு மாதத்திற்கு முன்பு லிங்க்ட் இன் தனது பணி நீக்கம் பற்றி தெரிவித்துள்ளார்.
பணி நீக்கத்தினை சமாளிப்பது கடினமாக இருந்தாலும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தால், இது மிக நீண்டகாலம் ஆகும். இது கடினமாகும்.


Click it and Unblock the Notifications