ஐடி துறையில் நீடித்து வரும் பணி நீக்கம் என்பது தற்போது வரையில் முடிவுக்கு வந்ததாக இல்லை. தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. சில நிறுவனங்கள் இரண்டாவது ரவுண்ட் பணி நீக்க நடவடிக்கையினையும் எடுத்து வருகின்றன. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
அந்த வகையில் தற்போது கூகுள் இந்தியா நிறுவனத்தில் பல துறைகளை சார்ந்த 453 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெயில் மூலம் பணி நீக்கம்
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனம் மெயில் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இந்த மெயில் வியாழக்கிழமையன்று நள்ளிரவில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிசினஸ்லைன் அறிக்கையின் படி, கூகுள் இந்தியாவின் தலைவரும், துணைத் தலைவருமான சஞ்சய் குப்தா இந்த மெயிலை அனுப்புள்ளதாகவும் தெரிகிறது.
கூகுள் இந்தியா பணி நீக்கம்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம் கடந்த மாதம் 12,000 ஊழியர்களை அல்லது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6% பேரை சர்வதேச அளவில் பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்தது. கூகுள் இந்தியாவில் செய்யப்பட்ட 453 பேர் பணி நீக்கம் என்பது இந்த 12,000 பேரில் அடங்குமா? அல்லது இது புதிய பணி நீக்கமா? என்பதும் தெரியவில்லை. மொத்தத்தில் பணி நீக்கம் என்பது உள்ளது தெரிகிறது.
சுந்தர் பிச்சை மன்னிப்பு
இந்த பணிநீக்க நடவடிக்கைக்கு ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் சில கருத்துகளும் இருப்பதாக தெரிகின்றது. பணி நீக்கத்திற்கு தான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் முன்னதாக ஊழியர்களுக்கு அனுப்பிய மெயில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முன்னதாக ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில், சுமார் 12,000 ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம். நம்பமுடியாத அளவுக்கு திறமையான பணியாளர்களிடம் விடைபெறும் நேரம் இது. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையில் தற்போது, இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னரே பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த பணி நீக்கம் ஆல்பாபெட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உண்டு என பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
உருக்கமான மெயில்
மேலும் இந்த பணி நீக்கத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கும் தானே முழுப்பொறுப்பு. கடுமையாக உழைத்த திறமை வாய்ந்த பணியாளர்கள் சிலரை விடுவிக்கப்போவதை அடுத்து, நான் மிகவும் வருந்துகிறேன்.
இந்த மாற்றங்கள் கூகுளைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னை மிகவும் பாதிக்கிறது. மேலும் எங்களை இப்படியொரு முடிவெடுக்க வழிநடத்தியதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என உருக்கமானதொரு மெயிலையும் அனுப்பி இருந்தார்.
பெரும் கவலையளிக்கும்
இந்த காலகட்டத்தில் கூகுள் மட்டும் அல்ல, அமேசான், மெட்டா, மைக்ரோசாப்ட், உள்ளிட்ட நிறுவனங்களும் தொடர்ந்து பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. தொடர்ந்து இன்றும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இது மேற்கொண்டு தொடரலாம் என்ற கவலையளிக்கும் நிலையே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications