உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமாக இகுக்கும் கூகுள் நிறுவனம் இன்று வான் அளவுக்கு உயர்ந்து நிற்க, அமெரிக்க இந்தியர் ஒருவரின் முதலீடு தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அதன் துவக்க காலத்திலும், வேகமாக விரிவாக்கம் செய்ய வேண்டிய காலத்திலும் கட்டாயம் முதலீடு அவசியம். இத்தகைய முக்கியமான காலக்கட்டத்தில் முதலீடு இல்லாமல் மாட்டிக்கொண்ட பல சிறப்பான நிறுவனங்கள் இன்று காணாமல் போயுள்ளது.

இந்த நிலையில் செர்கி பிரின் மற்றும் லேரி பேஜ் ஆகிய இரு இளம் பட்டதாரிகள் கூகுள் என்ற சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தங்களுடைய வீட்டின் கராஜ்-ல் துவங்கிய போது முதலீட்டாளர்கள் இல்லாமல் தவித்த போது கூகுள் நிறுவனத்தின் ஐடியா மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்தவர் கவிதார்க் ராம் ஸ்ரீராம்.
இந்தியாவில் இருந்து ஏழ்மையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்ற ஓரே நோக்கத்துடன் அமெரிக்கா சென்றவர் சொந்த காலில் 19600 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார் கவிதார்க் ராம் ஸ்ரீராம்.
3 வயதில் தந்தையை இழந்த கவிதார்க் ராம் பள்ளியில் சேர கூட முடியாமல் தவித்தார், பல தடைகளை தாண்டி மெட்ராஸ் பல்கலைகழகத்தில் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். இதை தொடர்ந்து அமெரிக்காவுக்கு சென்று MBA பட்டம் பெற்றார்.
இன்ஜினியராக தனது பணியை துவங்கி கவிதார்க் ராம் இன்று டெக் உலகை ஆளும் இரண்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு காரணமானவர் கவிதார்க் ராம்.
கூகுள் நிறுவனத்தின் ஆரம்பக்கட்டத்தில் கவிதார்க் ராம் சுமார் 0.5 மில்லியன் டாலர் அளவிலான முகலீடு செய்தார், தற்போது இதில் பெருமளவிலா பங்குகளை விற்பனை செய்துவிட்டாலும் ஆல்பபெட் நிர்வாக குழுவில் முக்கிய உறுப்பினராக உள்ளார்.
இதேபோல் அமேசான் நிறுவனம் தனது ஆரம்பக்கட்டத்தில் தான் தலைவராக இருந்த Junglee நிறுவனத்தை சுமார் 185 டாலருக்கு 1998ல் விற்று அமேசான் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.


Click it and Unblock the Notifications