கலிபோர்னியா: நம்மில் பலர் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது சர்ச் இன்ஜின்களைப் பயன்படுத்துகிறோம். பல சர்ச் இன்ஜின்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையான சர்ச் இன்ஜினாக கூகுள் இருக்கிறது. சுமார் 95 சதவீத மொபைல் மூலம் வரும் பயனர்கள், கூகுள் சர்ச் இன்ஜினைத் தான் பயன்படுத்துகின்றனர். எனவே, பயனர்களின் கேள்விக்கு விரைவாக பதில் அளிக்கும் விதமாக, AI தொழில்நுட்பத்தை சர்ச் இன்ஜின்-இல் கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் விரைவில் பயனர்கள் தேடும் கேள்வியின் விவரங்களைக் கொடுப்பதை கூகுள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அது என்ன தொழில்நுட்பம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இதற்கு முன்பும் கூகுள் AI தானே பயன்படுத்தியது.. தற்போது அதில் என்ன மாற்றம்.. என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு கேட்கிறது. இந்த புதிய AI தொழில்நுட்பத்தை சர்ச் இன்ஜின்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம், பயனர்கள் தேடும் கேள்விகளுக்கு AI உருவாக்கப்பட்ட சுருக்கமான ரிசல்ட் முதல் பக்கத்தில் காண்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கூகுள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தகவல்களை விரைவாக மீட்டெடுத்து பயனர்களுக்கு வழங்கும் விதமாக இதனைச் சர்ச் இன்ஜின்களில் புகுத்தியுள்ளது. இதனை நிறுவனம் கடந்த செவ்வாய் அன்று தெரிவித்தது. இதன் மூலம் கூகுள் சர்ச் இன்ஜின்னுக்கு வரும் டிராபிக் அதிகரிக்கக் கூடும் என்றும், அதனால் நிறைய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இந்த புதிய AI தொழில்நுட்பம், வரும் வாரத்தில் கூகுள் அறிமுகப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் பயனர்கள், ஏதேனும் விவரங்களை தேடும் போது கூகுளின் உருவாக்கப்பட்ட சுருக்கமான பதில்களை ரிசல்ட் பேஜின் முதல் பக்கத்தில் காணலாம்.
சிலர் கூகுள் சர்ச் இன்ஜின்களில் வேண்டுமென்றே, சில கேள்விகளை தந்திரமாக தேடுவதை நாம் அடிக்கடி இன்ஸ்டாகிராம் வீடியோக்களில் பார்த்திருப்போம். அலெக்சா போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டும். சிலர் வில்லங்கமான கேள்விகளைக் கேட்பதுண்டு. அதுபோல, வேண்டுமென்றே ட்ரிக்கான கேள்விகளைக் கேட்கும்போது, இதுபோன்ற AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட சுருக்கமான ரிசல்ட் காண்பிக்கப்படும்.
இதனால் நீங்கள் வழக்கமாக தேடுவது பாதிக்கப்படுமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வானிலை அறிக்கை, அருகில் உள்ள ஸ்டோர்கள் பற்றித் தேடும்போது பாரம்பரியமாக, நீங்கள் பார்க்கும் இணையதளங்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு கூகுள், இந்தப் புதிய அம்சத்தை, சில பயனர்களிடம் சோதனைச் செய்தது. அதன் பிறகு, தற்போது உலகின் பிற பகுதிகளில், இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அமெரிக்காவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு பில்லியன் மக்களுக்கு இந்த புதிய அம்சம் கொண்டுவரப்படும் என்று கூகுள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
கூகுள் தனது சர்ச் இன்ஜின்களில் AI பயன்படுத்துவதைக் கலிபோர்னியா மௌண்டைன் வியூவில் உள்ள அதன் தலைமையகத்தில், நடைபெற்ற மாநாட்டில் முன்னிலைப்படுத்திக் கூறியது. தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூகத்தில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படுகிறது என்பதை குறித்தும் கூகுள் விளக்கியது.


Click it and Unblock the Notifications