ஆல்பாஃபெட்டின் கூகுள் நிறுவனம் 1 பில்லியன் டாலர் முதலீட்டினை, அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான சிஎம்இ குழுமத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது உலகின் மிகப்பெரிய பைனான்ஷியல் டெரிவேட்டிவ்ஸ் எக்ஸ்சேன்ஞ் ஆகும்.
இது விவசாயம், எனர்ஜி, கரன்சிகள், மெட்டல்ஸ் உள்ளிட்ட பலவும், இந்த எக்ஸ்சேன்ஞ்சில் வணிகம் செய்யப்படுகின்றது.
கிளவுட் சொல்யூசன்ஸ்
இப்படிப்பட்ட உலகின் மிகப்பெரிய ஒரு எக்ஸ்சேன்ஞ்சில் தான், அமெரிக்காவின் டெக் ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனமும் முதலீடு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தமானது 10 ஆண்டுகால ஒப்பந்தமாகும். சிகாகோவினை தளமாகக் கொண்ட இந்த எக்ஸ்சேன்ஞ் ஆப்ரேட்டர், அதன் தொழில் நுட்ப உள்கட்டமைப்பை கிளவுட்டுக்கு மாற்ற முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மிகப்பெரிய டீல்
சிஎம்இ குழுமத்துடன் செய்துள்ள இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய டீல் ஆகும். இது மேற்கோண்டு கூகுளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது அமேசான் இன்க் மற்றும் மைக்ரோசாப்ட் கார்ப் நிறுவனங்களுக்கு எதிரான, ப்ளூ சிப் பார்ச்சூன் 500 நிறுவனங்களின் பெரிய இலாபகரமான ஒப்பந்தங்களுக்கு மத்தியில் கூகுள் நிறுவனமும் மிகப்பெரிய ஒப்பந்தத்தினை வென்றுள்ளது.
பங்குகளாக முதலீடு
சிஎம்இ குழுமத்தில் செய்யப்பட்ட இந்த முதலீடானது ஈக்விட்டி பங்குகளாக முதலீடு செய்யப்படுள்ளது.
கூகுள் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம் மூலம், அதிக வாடிக்கையாளார்கள் எளிதாக சந்தையினை அணுகலை வழங்கவும், உள்கட்டமைப்பினை மேம்படுத்தவும், பிற செயல்பாடுகளை நெறிபடுத்தவும் இந்த உதவும் என சிஎம்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் ஒப்பந்தம்
கடந்த ஆண்டு அமேசான் மற்றும் இரு எக்ஸ்சேன்ஞ், சிங்கப்பூர் எக்ஸ்சேன்ஞ் எஸ்ஜிஎக்ஸ் (Singapore Exchange SGX) மற்றும் லண்டனை அடிப்படையாக கொண்ட அக்விஸ் எக்ஸ்சேன்ஞ் (Aquis Exchange) ஒரு மிகப்பெரிய திட்டத்தினை மேற்கொண்டது. இது பிசிகல் சர்வர்களில் இருந்து, மிக உயர்தரமான கிளவுட் சேவைக்கு மாற்ற செய்யப்பட்ட ஒப்பந்தமாகும்.


Click it and Unblock the Notifications