உலகளவில் முக்கியமான சர்ச் இன்ஜின் ஆக கூகுள் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தை தக்க வைக்க கூகுள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளில் கூகுளை டீஃபால்ட் சர்ச் இன்ஜின் ஆக நீட்டிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை கூகுள் செலுத்தி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் உள்ளிட்ட கருவிகளில் நாம் பிரவுசருக்கு சென்றாலே கூகுள் தான் இடம்பெற்றிருக்கும். இப்படி டீஃபால்ட் சர்ச் இன்ஜின் ஆக செயல்படுவதற்காக கூகுள் நிறுவனம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்பிளுக்கு செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கூகுள் இதற்காக 15 பில்லியன் டாலர்களை ஆப்பிளுக்கு வழங்கியது. அதுவே 2022 ஆம் ஆண்டு 20 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது என ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.
பிரதான சர்ச் இன்ஜின் என்ற இடத்தை தக்க வைப்பதற்காக கூகுள் , பெரும் தொகையை செலுத்துகிறது.போட்டி அதிகரிக்க அதிகரிக்க ஆண்டுதோறும் இந்த தொகையையும் கூகுள் அதிகரிக்க வேண்டியுள்ளது.
ஆப்பிளின் ஐபோன், ஐபேட் கருவிகளில் பயனாளர்கள் சர்ச் இன்ஜின்களை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் தரப்பட்டுள்ளன. இருப்பினும் டீஃபால்ட் ஆக கூகுள் சர்ச் இடம்பெற்று இருப்பதால் ஐபோன் ஐபேட் மற்றும் மேக் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் கூகுளை தேடு புரியாத பயன்படுத்துகின்றனர்.
இதனால் கூகுள் நிறுவனத்திற்கு பெருமளவு வருவாய் கிடைக்கிறது. எனவேதான் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் ஆப்பிளுக்கு செலுத்தி வரும் தொகையை அதிகப்படுத்தி வருவது.
ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் தங்களுடைய தேடு பொறியை டீஃபால்ட் தேடு பொறியாக மாற்றிக் கொள்ளும்படி பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் அது வெற்றி அடையவில்லை. போட்டி அதிகரித்து இருப்பதன் காரணமாக கூகுள் நிறுவனம் \ ஆப்பிளை கைவிடக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் கருவிகளில் கூகுளின் ஜெமினி ஏஐ -ஐ ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்ற வருகின்றன. அதேபோல ஓபன் ஏஐ நிறுவனமும் சாட் ஜிபிடியை ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications