நவீன தொழில்நுட்ப உலகில் பெரு நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்படுவது அவ்வப்போது நாம் கேள்விப்படும் பொதுவான செய்தியாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. கூகுள் நிறுவனம் செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை குறைக்கத் தொடங்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்த கூகுள் நிறுவனம் தற்போது இந்தியாவில் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய பணி நீக்கம் தொடர்பான காரணம் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த பதிவு.

கூகுள் நிறுவனத்தின் இந்த பணிநீக்கம் இந்தியாவில் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் ரோல்களில் பணிபுரியும் ஊழியர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் பணி நீக்கங்கள் தொடரும் என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்து வெளியிட்டுள்ளது.
அதோடு கூகுள் நிறுவனம் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அலுவலகங்களில் பணிபுரியும் பொறியியல் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களை உடனடியாக அதிக வருவாய் கிடைக்கக்கூடிய ப்ராஜெக்ட்களுக்கு மாற்றி நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் நடக்கப் போகும் இந்த பணி நீக்கம் குறித்து எந்த ஒரு தகவலையும் கூகுள் நிறுவனம் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதோடு எத்தனை ஊழியர்கள் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் என்ற விவரமும் தெரியவில்லை. சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் டிவைஸ்கள், பிக்சல் போன்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக அறிவித்தது.
மறு சீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் விருப்ப ஓய்வு பெரும் திட்டங்களையும் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்தது. பெரிய அளவிலான பணி நீக்கங்கள் நடப்பதற்கு முன்பு ஊழியர்கள் தாமாகவே ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேற ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். தாங்களாகவே நிறுவனத்தை விட்டு வெளியேறினால் அதற்கு ஊழியர்களுக்கு சில சலுகைகளும் கிடைக்கும். இதனால் நிறுவனம் கட்டாயமாக பணிநீக்கம் செய்வதை குறைக்கும்.
2023-ஆம் ஆண்டிலும் கூகுள் நிறுவனம் இதே போல பணிநீக்கத்தை தொடர்ந்தது. அப்போது கூகுள் அதன் உலகளாவிய பணியாளர்களில் 6 சதவீதத்தைக் குறைத்தது. இதனால் சுமார் 12,000 ஊழியர்கள் வேலை இழந்தனர். அப்போது நடந்த பணி நீக்கங்கள் குறிப்பாக பொறியியல், ப்ராடக்ட் மற்றும் கார்ப்பரேட் ரோல்களில் பணிபுரிந்த ஊழியர்களைப் பாதித்தது.
2025-ஆம் ஆண்டில் இதுவரையில் 93 நிறுவனங்களில் 23,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தியை பணிநீக்கம் குறித்து கண்காணிக்கும் தளமான Layoffs.fyi தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து பணிநீக்கம் குறித்த செய்தி வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. நாளுக்கு நாள் வேலையிழப்பு அதிகரிப்பதை இதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications