பெங்களூரில் கூகுள் நிறுவனம் தனது பிரம்மாண்டமான புதிய வளாகமான "அனந்தா" வளாகத்தை திறந்துள்ளது. தொழில்நுட்ப உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள கூகுள் தனது வளர்ச்சி பயணத்தின் மற்றும் ஒரு மைல்கல்லாக இந்த வளாகத்தை கட்டி எழுப்பியுள்ளது. இந்தியாவில் தனது இருப்பை அதிகப்படுத்தும் விதமாக கிழக்கு பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் இந்த வளாகம் அமைந்துள்ளது.
இந்த புதிய வளாகம் உலக அளவில் பார்க்கும்போது மிகப்பெரிய அலுவலகங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியா ஒரு முக்கிய நாடாக இருப்பதாலும், மில்லியன் கணக்கான மக்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களை ஆன்லைனில் கொண்டு வருவதற்காகவும் கூகுள் நிறுவனம் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து இந்த அலுவலகத்தை கட்டியுள்ளது. "அனந்தா" என்பதற்கு சமஸ்கிருதத்தில் வரம்பற்ற என்று பொருள். 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவிலும் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்தக்கூடிய வகையிலும் இந்த வளாகம் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்தில் ஆண்ட்ராய்டு, சர்ச், மேப், கூகுள் டீப் மைண்ட் போன்ற கூகுளின் பல்வேறு பிரிவுகளில் பணி புரியும் ஊழியர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அனந்தா அலுவலகம் முக்கியமாக பிற ஊழியர்களுடன் விசாலமாக கலந்துரையாடல்களை நடத்தவும், அதே சமயத்தில் ஊழியர்கள் தங்களுக்கு கொடுத்த வேலைகளை செய்வதற்கான பூத்துகளையும் கொண்டுள்ளது.
வளாகத்தில் நடை பயிற்சி கூடம் மற்றும் ஜாகிங் பாதைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரோ கிரோமிக் கண்ணாடி கொண்டு இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு 100% பயன்படுத்தப்பட்ட நீரை ரீசைக்கிள் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு மழை நீர் சேகரிப்பு வசதிகளும் சேர்த்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கூகுளுக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். எனவே கூகுள் அதன் எதிர்கால வளர்ச்சிக்கு உதவுவதற்காக இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் அதன் பல்வேறு தயாரிப்புகளில் சில முக்கிய அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
2024-ஆம் ஆண்டில் கூகுள் அதிக அளவிலான மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் இருந்து பல தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சார்ந்த ஊழியர்களை இந்தியாவிற்கு மாற்றியது. தற்போது 10,000-த்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் அதிக ஊழியர் தளங்களில் ஒன்றாக உள்ளது. பெங்களூரை தவிர கூகுள் நிறுவனத்திற்கு குருகிராம், ஹைதராபாத் மும்பை மற்றும் பூனே ஆகிய இடங்களிலும் அலுவலகங்கள் உள்ளன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications